• HOME
  • »
  • NEWS
  • »
  • india-china
  • »
  • இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை பாஜக அரசு நிரூபித்து விட்டது, ராகுல் காந்திக்கு எதுவும் புரியாது: மத்திய அமைச்சர் தாக்கு

இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை பாஜக அரசு நிரூபித்து விட்டது, ராகுல் காந்திக்கு எதுவும் புரியாது: மத்திய அமைச்சர் தாக்கு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி எதையும் புரிந்து கொள்ளவும் இல்லை, புரிந்து கொள்ள முயற்சிக்கவும் . ராகுல் காந்தியின் பேச்சு நாகரீகமில்லாதது, முதிர்ச்சியற்றது.

  • Share this:
    சீனாவிடம் ஏன் எல்லைப்பகுதியை பாஜக அரசு விட்டுக்கொடுத்தது, இதைப்பற்றி ஏன் மோடி மவுனம் காக்கிறார், ஏப்ரல் 2020க்கு முந்திய நிலையில் நமக்கு எல்லை கிடைக்குமா? அல்லது ஆக்ரமிப்புகளுடன் கூடிய எல்லைதானா என்று காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வருகிறது.

    இதற்கு பாஜக தரப்பில், மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், “இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும், எப்படி பதிலடி கொடுப்போம், என்பதை பாஜக தலைமையிலான மத்திய அரசு அண்டை நாடுகளுக்கும், தெற்கு, மேற்கு எல்லையில் உள்ள நாடுகளுக்கும் வெளிப்படுத்திவிட்டது,

    இதை உலகமும் பார்த்துவிட்டது. ராகுல் காந்தி எதையும் புரிந்து கொள்ளவும் இல்லை, புரிந்து கொள்ள முயற்சிக்கவும் . ராகுல் காந்தியின் பேச்சு நாகரீகமில்லாதது, முதிர்ச்சியற்றது.” என்று சாடினார்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில், “ இந்தியாவின் எல்லைப்பகுதியை சீன ராணுவத்துக்கு பிரதமர் மோடி விட்டுக்கொடுத்துவிட்டார். ஃபிங்கர்-4 பாயின்ட் என்பது இந்தியாவின் எல்லை.

    அங்குவரை நமது எல்லைப்பகுதியாக பயன்படுத்தி வருகிறோம். இப்போது நாம் ஃபிங்கர்-4 பாயின்ட் பகுதியிலிருந்து ஃபிங்கர்-3 பாயின்ட் பகுதிக்கு நகர்கிறோம்.

    எதற்காக இந்தியாவின் எல்லைப்பகுதியை சீன ராணுவத்துக்கு பிரதமர் மோடி விட்டுக் கொடுத்தார். இந்த கேள்விக்கு பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

    ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதில் அளி்க்கையில் “ இந்திய எல்லையை சீனாவிடம் யார் விட்டுக்கொடுத்தது என்று ராகுல் காந்தி அவரின் தாத்தாவிடம் கேட்க வேண்டும். அப்போது ராகுல் காந்திக்கு பதில் கிடைக்கும். யார் தேசப்பற்றாளர்கள். தேசப்பற்றில்லாதவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்” எனத் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கேட்ட 8 கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பாஜக தலைவர்கள் மீண்டும் நேருவைக் கேள் இந்திராவைக் கேள் என்று பழைய பல்லவியைப் பாடுவதாக காங்கிரஸார் விமர்சித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: