சீன அதிபரின் உருவபொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவத்தை எரித்த பாஜகவினர் (வீடியோ)

சீனாவின் மீதுள்ள கோபத்தில், சீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவப்படத்தை எரித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் மேற்கு வங்கத்தின் அசான்சோலைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள்.

சீன அதிபரின் உருவபொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவத்தை எரித்த பாஜகவினர் (வீடியோ)
kim jong un
  • Share this:
இந்திய-சீன எல்லையில் சீன வீரர்களின் தாக்குதலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர், பல ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்த வலைதளவாசிகள் பலர், சீன தயாரிப்புகளை இனி பயன்படுத்தப்போவதில்லை எனவும், சிலர் அதற்கும் மேலாக சென்று சீனப் பொருட்கள் சிலவற்றை சேதப்படுத்தி படங்களை பதிவேற்றவும் செய்தனர்.

#BoycottChina, #BoycottMadeinChina மற்றும் #BoycottChineseProducts  போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.இந்நிலையில், சீனாவின் மீதுள்ள கோபத்தில், சீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவப்படத்தை எரித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் மேற்கு வங்கத்தின் அசான்சோலைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள்.

தமிழகத்தில், ராஜ்புத் சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பத்மாவத் திரைப்படம் திரைக்கு வந்தபோது, தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் திரைப்பட அரங்கிற்குச் செல்லாமல் அனுஷ்கா ஷெட்டி நடித்த பாகுமதி திரையரங்கிற்குச் சென்று சில அமைப்புகள் போராட்டம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குழப்பத்தை வைத்து சமூகவலைதளங்களில் இந்த வீடியோ ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading