முகப்பு /செய்தி /இந்தியா - சீனா / கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 45 சீன வீரர்கள் பலியானது உண்மைதான்: ரஷ்ய செய்தி நிறுவனம் திட்டவட்டம்

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 45 சீன வீரர்கள் பலியானது உண்மைதான்: ரஷ்ய செய்தி நிறுவனம் திட்டவட்டம்

மாதிரி படம்

மாதிரி படம்

லடாக் எல்லையில், கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் அத்துமீறிய போது, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், 43க்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை மறுத்த சீனா, இப்போது வரை, இந்திய பதிலடியில் கொல்லப்பட்ட சீன வீரர்களின் எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

லடாக் எல்லையில், கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்திய சம்பவத்தில் சீன ராணுவத்தினர் 45 பேரும் பலியாகியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் கூறியுள்ளது.

லடாக் எல்லையில், கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் அத்துமீறிய போது, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், 43க்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை மறுத்த சீனா, இப்போது வரை, இந்திய பதிலடியில் கொல்லப்பட்ட சீன வீரர்களின் எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ரஷ்ய செய்தி நிறுவனமான, 'டாஸ்' தெரிவித்துள்ளதாவது: லடாக்கில், சீனா - இந்தியா இடையே நடந்த மோதலில், 45க்கும் அதிகமான சீன வீரர்களும், 20 இந்திய வீரர்களும் இறந்தனர். தங்களின், 20 வீரர்கள் உயிர் தியாகம் செய்ததை, இந்தியா உடனடியாக தெரிவித்தது. ஆனால், இந்த விவகாரத்தில், தங்கள் இழப்பை மூடி மறைக்க சீனா முயற்சிக்கிறது. லடாக் தாக்குதலில், சீனாவுக்கு தான், இழப்பு அதிகம்.

ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் செய்தி ஏஜென்சியின் இந்தத் தகவல் அப்போது வெளிவந்த பிற வெளிநாட்டுத் தகவல்களுடன் ஒத்துப் போவதாக உள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் சீனா தன் தரப்பு இழப்பை இன்னமும் வெளியிடாமல் கமுக்கமாக மறைத்து வருகிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் அமெரிக்கா உட்பட பல நாட்டு செய்திகள் சீனாவுக்கும் கடும் சேதம் ஏற்பட்டது என்றும் கமாண்டிங் ஆபீசர் உட்பட 45 வீரர்கள் பலியாகினர் என்றும் பிற செய்திகள் தெரிவித்த வண்ணம் இருந்தன.

ஜூன் 15ம் தேதி 3 தனித்தனி சண்டைகள் மூண்டன். பிஹார் இன்ஃபேண்ட்ரி ராணுவப்படையின் தலைவர் கலோனல் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தினர்.

இதற்கிடையே பேங்காங் ஸோ-வின் வடக்கு மற்றும் தெற்குக் கரைப் பகுதிகளில் சீன, இந்திய ராணுவங்கள் படைகளை வாபஸ் பெற்று வருகின்றன. இது தவிர நேருக்கு நேர் மோதல் ஏற்படும் நிலையில் இருந்த நிலைகளிலிருந்து இரு நாட்டுப் படைகளும் விலக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

First published: