₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்
கேரளாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விஷப்பாம்பு வாங்கி கடிக்க விட்டு மனைவியைக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விஷப்பாம்பு வாங்கி கடிக்க விட்டு மனைவியைக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- News18 Tamil
- Last Updated: May 25, 2020, 8:34 AM IST
கொல்லம் அருகே அனச்சலைச் சேர்ந்த சூரஜின் மனைவி உத்ரா கடந்த 7-ம் தேதி பாம்பு கடித்து உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணையில் அவரது கணவர் சூரஜ் திட்டமிட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கெனவே பிப்ரவரியில் 5 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவி உத்ராவுக்கு தெரியாமலேயே அவரை கடிக்க விட்டுள்ளார். அப்போது உத்ராவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் 5 ஆயிரம் ரூபாய்க்கு விஷப் பாம்பு வாங்கிய சூரஜ், மே 7ம் தேதி அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த உத்ராவை கடிக்க வைத்துள்ளார். மனைவிக்கு பாம்பு கடித்ததை காலை வரை யாரிடமும் சொல்லாமல் அவர் உயிரிழக்க காரணமாகியுள்ளார். நகைக்கு ஆசைப்பட்டு மனைவியை சூரஜ் கொன்றதாக கூறப்படும் நிலையில், அவருடன் பாம்பு விற்ற சுரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே பிப்ரவரியில் 5 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவி உத்ராவுக்கு தெரியாமலேயே அவரை கடிக்க விட்டுள்ளார். அப்போது உத்ராவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் 5 ஆயிரம் ரூபாய்க்கு விஷப் பாம்பு வாங்கிய சூரஜ், மே 7ம் தேதி அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த உத்ராவை கடிக்க வைத்துள்ளார். மனைவிக்கு பாம்பு கடித்ததை காலை வரை யாரிடமும் சொல்லாமல் அவர் உயிரிழக்க காரணமாகியுள்ளார்.