புயல் மற்றும் கனமழையின்போது பயிர்கள் சேதமடையாமல் இருக்க விவசாயிகள் செய்ய வேண்டியவை என்னென்ன?

புயல் மற்றும் கனமழையின்போது பயிர்கள் சேதமடையாமல் இருக்க விவசாயிகள் செய்ய வேண்டியவை என்னென்ன?

கோப்பு படம்

புயல் மற்றும் கனமழையின் போது பயிர்கள் சேதமடையாமல் பாதுகாப்பதற்கு விவசாயிகள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

 • Share this:
  புயல் மழை காலங்களில் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து தமிழக வேளாண்மைத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் புயல் வருவதற்கு முன்னரே பயிர் காப்பீடு செய்ய வேண்டும். தென்னை மரங்களில் இளம் ஓலைகளை தவிர்த்து காய்ந்த மட்டைகள் மற்றும் முதிர்ந்த தேங்காய்களை வெட்டி அகற்ற வேண்டும்.

  புயல், மழை வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும். இதனால் வேர்ப்பகுதி மண்ணில் இறுகி மரம் சாய்ந்து விடாமல் இருக்கும். தோட்டக்கலை பயிர்களின் பக்கவாட்டு இலைகளை வெட்டி, அந்த இடத்தில் பூஞ்சாண் நோய் பரவாமலிருக்க மருந்து பூச வேண்டும்.

  மேலும்  படிக்க... Cyclone Burevi | இலங்கை கடற்கரை கிராமங்களுக்கு இடையே கரையைக் கடந்தது புரெவி புயல்..

  பழ மரங்களுக்கு சவுக்கு கம்புகள் மூலம் ஊன்றுகோல் அமைக்க வேண்டும். சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு போன்ற பயிர்களுக்கு வடிகால் வசதியினை ஏற்படுத்த வேண்டும். விளை பொருட்களை அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கிடங்குகளில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: