ஜியோ வாடிக்கையாளர்களே! சந்தேகங்கள், புகார்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் இதோ...

வாடிக்கையாளர் சேவைக்கு ஜியோவின் ஆன்லைன் உதவி நிலையங்கள் இல்லை. ஆனால் நீங்கள் அவர்களை தொலைபேசியில் அழைக்கலாம்.

ஜியோ வாடிக்கையாளர்களே! சந்தேகங்கள், புகார்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் இதோ...
ஜியோ
 • Share this:
இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர் சேவைக்கு ஜியோவின் ஆன்லைன் உதவி நிலையங்கள் இல்லை. ஆனால் நீங்கள் அவர்களை தொலைபேசியில் அழைக்கலாம்.

அந்த வகையில், தரவு இருப்பு, வேலிடிட்டி, ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் ரீசார்ஜ் உறுதிப்படுத்தல் தொடர்பான கேள்விகளுக்கு ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் ஜியோ எண்ணிலிருந்து 1991 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைக்கலாம்.

மேலும், எந்தவொரு புகாரையும் பதிவு செய்ய, வாடிக்கையாளர்கள் பராமரிப்பு எண்ணை அதாவது 198 ஐ அழைக்கலாம். இதற்கும் கட்டணம் இல்லை.


தவிர, மற்றொரு ஆபரேட்டரிடமிருந்து அழைக்கும் ஜியோ
வாடிக்கையாளர்கள் 1800 889 9999 என்ற ஜியோகேர் நம்பரை அணுகலாம். இது போன்று பல பராமரிப்பு விஷயங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் பின்வருமாறு:

ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள் என்ன?

 • ஜியோ பயனர்களுக்கான வாடிக்கையாளர் பராமரிப்பு எண்: 199/198

 • ஜியோ ஃபைபர் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான கட்டணமில்லா எண்: 1800-896-9999

 • ஜியோ கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கான கட்டணமில்லா எண்: 1800- 889-9333

 •  ஜியோ ஃபைபர் புதிய இணைப்பைப் பெற கட்டணமில்லா எண்: 1800 103 8877


மோசமான ஜியோ நெட்வொர்க் பற்றி எவ்வாறு புகார் செய்வது?

 • உங்கள் புகாரை பதிவு செய்ய ரிலையன்ஸ் ஜியோ புகார் எண்ணை
  அதாவது 198-ஐ அழைக்கலாம்.

 • மேலும், ஜியோவின் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியுடன் பேச 1860-893-3333 என்ற எண்ணில் அழைக்கலாம்.

 • இந்த சேவைகள் 24x7 இல் கிடைக்கின்றன.


ஜியோ ஃபைபர் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?

ஜியோ ஃபைபர் ஆர்டரை ரத்து செய்ய, நீங்கள் கட்டணமில்லா
ஹெல்ப்லைன் எண் 1800 893 3399-ஐ அழைக்கலாம்.

ஆர்டர் வெற்றிகரமாக ரத்துசெய்யப்பட்டதும், திரும்பப் பெறும் கொள்கையின்படி உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதல் உங்கள் கட்டண மூலத்திற்குத் தொடங்கப்படும்.

ஜியோ ஃபைபர் வயர்லெஸா? ஆம்.

எனது ஜியோ ஃபைபர் சேவையை எவ்வாறு பெறுவது?

 • OTP மூலம் Jio.com இல் உள் நுழைய வேண்டும்.

 • 'எனது அறிக்கை ' (My Statement) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

 • தொடக்க மற்றும் இறுதி தேதிகளை குறிப்பிடவும், தேதி வரம்பை 30 நாட்களுக்குள் குறிப்பிட வேண்டும்.

 • அறிக்கையை உருவாக்க 'காண்க' (View) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் PDF வடிவத்திலும் இதை பதிவிறக்கம் செய்யலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால் அல்லது ஜியோ சேவைகளில் ஆதரவு
தேவைப்பட்டால் என்ன மின்னஞ்சல் ஐடிக்கு எழுத முடியும்?

ஜியோ தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான ஏதேனும் கேள்விகளை  https://www.jio.com/en-in/contact-us#/  இந்த இணையத்தில் அனுப்பலாம்.

புகாரின் நிலையை ஆன்லைனில் எவ்வாறு கண்காணிப்பது?

ஜியோவின் வலைத்தளமான www.jio.com அல்லது MyJio பயன்பாட்டில் உங்கள் கணக்கில் உள்நுழைவதன் மூலம்  உங்கள் புகாரின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.


மேல்முறையீட்டு அதிகார சபையின் தொடர்பு எண் என்ன?

புகார் தீர்மானத்தில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால்,  மேல்முறையீட்டு ஆணையத்திற்கு ஜியோ மாநில அலுவலக முகவரியில் அல்லது வலைத்தளமான https://www.jio.com/en-in/contact-us இல் கிடைக்கும் மின்னஞ்சல் ஐடியில் எழுதலாம்.

Also read |  வெளிநாடு செல்ல ஆசையா? முதலில் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ண என்னென்ன தேவை தெரிஞ்சுக்கோங்க

நீங்கள் ஜியோ மேல்முறையீட்டு ஆணையத்தை 1800 889 3999 என்ற எண்ணிலும்  அழைக்கலாம்.
First published: October 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading