Home /News /how-to /

FASTag என்றால் என்ன? எப்படி பெறுவது? எப்படி பயன்படுத்துவது?

FASTag என்றால் என்ன? எப்படி பெறுவது? எப்படி பயன்படுத்துவது?

FASTag என்றால் என்ன? எப்படி பெறுவது? எப்படி பயன்படுத்துவது?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயம் ஆவதைத் தடுப்பதற்காக பாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் வரும் 15ம் தேதி முதல் அறிமுகம் செய்கிறது.

    இதன்படி வாகனத்தின் முகப்பில் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டவேண்டும். அதன்பிறகு சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும்போது அங்குள்ள கருவிகள் தானாகவே கட்டணத்தை கழித்துக் கொள்ளும், இதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

    பாஸ்டேக் ஸ்டிக்கரை ஆக்டிவேட் செய்து தர 22 முக்கிய வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வங்கிகளுக்கு நேரடியாக சென்று ஸ்டிக்கரை வாங்கலாம். அதற்காக 100 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். அத்துடன் திரும்பப் பெறக்கூடிய 100 அல்லது 200 ரூபாய் டெபாசிட் தொகையை செலுத்தவேண்டும். அதன்பின்னர் ரீசார்ஜ் செய்யவேண்டும். சில வங்கிகள் ரீசார்ஜை 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் தருகின்றன. அதன்பிறகு டாப்- அப் போல் தொடர்ந்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

    ஆன்லைனில் பாஸ்டேக் பெறவிரும்புவோர் My FASTag செயலியை கூகுள்பிளே ஸ்டோரிலும், <next>ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோரிலும் டவுன்லோடு செய்யலாம்.

    பின்னர் விரும்பிய வங்கிக் கணக்குடன் அதை இணைத்துக் கொள்ளலாம்.

    இல்லையேல் அந்த செயலி வாயிலாக நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பிரீ-பெய்டு திட்டத்திலும் இணைத்துக் கொள்ளலாம். பின்னர் தேவைப்படும் தொகையை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் லோடு செய்து கொள்ளலாம். மாதத்துக்கு அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே லோடு செய்யமுடியும்.

    இல்லையேல் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்குச் சென்று பாஸ்டேகை பெற்று வங்கிக்கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம். சுங்கச்சாவடிகளை கடக்கையில் வங்கிக் கணக்கில் இருந்து உரிய தொகை தானாக கழியும். பாஸ்டேகை நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளிலேயே பெறும் வசதியும் உள்ளது.

    பாஸ்டேக் பெறுவதற்கு வாகனத்தின் ஆர்.சி. புத்தக நகல், இருப்பிடம் மற்றும் அடையாளச் சான்று நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவை கட்டாயம். பாஸ்டேக் ஸ்டிக்கர் 5 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது. பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் பிரத்யேக பாஸ்டேக் பாதையில் நுழைந்தால் இரு மடங்கு கட்டணம் செலுத்தவேண்டும்.
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Fastag

    அடுத்த செய்தி