• HOME
  • »
  • NEWS
  • »
  • how-to
  • »
  • Fastag | ஃபாஸ்டேக் என்றால் என்ன?

Fastag | ஃபாஸ்டேக் என்றால் என்ன?

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஃபாஸ்டேக் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்பது என்ன?

  • Share this:
    ஃபாஸ்டேக் குறித்து பலர் கேள்விப்பட்டிருந்தாலும், அதன் முழுமையான விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். ஃபாஸ்டேக் என்பது சுங்கச்சாவடிகளில் பிரத்யேக மின்னணு தொழில்நுட்பம் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையாகும். அதாவது சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பாதைகளை கடந்து செல்லும் வாகனங்களின், சுங்கக்கட்டணத்தை ஆர்.எஃப்.ஐடி என்கிற தானியங்கி இயந்திரம் மூலமாக தாமாக வசூலிக்கப்படும்.

    இதன்மூலம் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணத்தை தொடர முடியும். கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டாக் ஸ்டிக்கர் பெற வேண்டும் என்றால். குறைந்தபட்சம் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும். அதில் டேக் முன்பணமாக 200 ரூபாய் இருப்பு வைக்கப்படும். குறைந்தபட்சத் தொகையாக 150 ரூபாய் சேர்க்கப்படும். ஸ்டிக்கருக்கு 100 ரூபாய் வரை வசூல் செய்யப்படும்.

    பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு 800 முதல் 1000 ரூபாய் வரை செலுத்தி ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் பெற வேண்டியிருக்கும். ஒவ்வொரு வங்கியை பொறுத்து ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டணம் மாறுபடும். குறைந்தபட்சம் இருப்பு தொகை இருந்தால் மட்டுமே சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்த முடியும். ஃபாஸ்டேக் கணக்கை எப்போதும் ரீசார்ஜ் செய்து பணத்தை இருப்பு வைக்க வேண்டும்.

    ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் பெற்ற தேதியிலிருந்து 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதுவரை அதில் உள்ள பணத்தை சுங்கக் கட்டணமாக பயன்படுத்தலாம். ஃபாஸ்டேக் முறை முழுவீச்சில் அமலுக்கு வந்தவுடன், சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நிலை மாறி, பயண நேரம் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க...கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்வது எப்படி?

    எரிபொருள் சிக்கனம் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படும் எனவும் சுங்க கட்டண முறையில் வெளிப்படைத்தன்மை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ஒரு வழியில் மட்டும்தான் பணம் கொடுத்து சுங்ககட்டணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: