செல்ஃபோன்களில் லோன் ஆப் மூலம் கடன் பெறுபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?

செல்ஃபோன்களில் லோன் ஆப் மூலம் கடன் பெறுபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?

கோப்புப் படம்

ஆப்கள் தனியார் ஏஜென்சிகள் மூலமே பணத்தை வசூலிக்கின்றன. ஏஜென்சிகளோ பணத்தை வசூலிக்க பல்வேறு அச்சுறுத்தல்களில் ஈடுபடுகின்றன. அதனால் லோன் ஆப்களின் மூலமாக கடன் வாங்காமல் இருப்பது நலம்.

 • Share this:
  சமீபகாலமாக லோன் ஆப்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் எளிதில் கடன் கிடைத்து விடும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஆவணங்களை கொடுத்து கடன் பெற காத்திருக்க வேண்டியதில்லை. லோன் ஆப் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் போதுதான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. கடன் தந்த நிறுவனங்கள், பல்வேறு மிரட்டல்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்கின்றன.

  இந்த ஆப்களில் கடன்பெறுவதால், மொபைலில் உள்ள காண்டேக்ட் (contact) எண்கள் உள்ளிட்ட தகவல்கள் திருதப்படுவதாக அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் மிகப்பெரிய மன உளைச்சல் ஆளாவதாக கூறுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

  மேலும் படிக்க...Fastag | ஃபாஸ்டேக் என்றால் என்ன?

  இதுபோன்ற லோன் ஆப்களை நிர்வகிப்போர் ரிசர்வ் வங்கி விதிகளை சற்றும் மதிப்பதில்லை என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டு அங்கீகாரம் பெற்ற வங்கியிலிருந்தோ அல்லது நிதி நிறுவன கணக்கில் இருந்தோ இந்த ஆப்கள் வருவதில்லை. அதேபோல் அரசிடம் இருந்து அனுமதியும் பெறுவதில்லை.

  ஆப்கள் தனியார் ஏஜென்சிகள் மூலமே பணத்தை வசூலிக்கின்றன. ஏஜென்சிகளோ பணத்தை வசூலிக்க பல்வேறு அச்சுறுத்தல்களில் ஈடுபடுகின்றன. அவ்வாறு அவர்கள் மிரட்டினால் பாதிக்கப்படுபவர்கள் தயக்கம் இல்லாமல் காவல்துறையை அணுக வேண்டும் என தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள். லோன் ஆப்-ஐ ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கிவிட்டு, சமூக வலைதளத்தில் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பதிவிடுமாறும் கூறுகிறார் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்.

  தொலைபேசியில் அழைத்து மிரட்டுபவர்கள் நேரில் வர வாய்ப்பு இல்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் பயப்பட தேவையில்லை என்றும், வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் நிம்மதியான வாழ்க்கைக்கு எளிதாக லோன் ஆப்களிலிருந்து கடன் பெறுவதை தவிர்ப்பதே சிறந்தது என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: