டிக்டாக்கிற்கு தடை - உங்களது வீடியோ மற்றும் தரவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

டிக்டாக் செயலி காலவரையின்றி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும் உங்கள் வீடியோக்கள் உட்பட உங்கள் சில தரவுகளை நீங்கள் காப்பாற்றலாம்.

டிக்டாக்கிற்கு தடை - உங்களது வீடியோ மற்றும் தரவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
டிக் டாக்
  • Share this:
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மொபைல் மற்றும் இதர மின்னணு கருவிகளில் பயன்படுத்தக்கூடிய 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

டிக்டாக் செயலியை உலகம் முழுவதும் 800 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 119 மில்லியன் பேர் டிக்டாக்செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஐபோனில் அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் 4-வது இடத்தில் உள்ளது.

டிக்டாக் செயலியை மத்திய அரசு தடை செய்துள்ளதால் அதன் பயனாளர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கம் திரும்ப திட்டமிட்டுள்ளனர். டிக்டாக்கில் உங்களது வீடியோ மற்றும் தரவுகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.


டிக்டாக் செயலிக்குள் நுழைந்து உங்களது புரோஃபைல் பக்கம் செல்லவும், எந்த வீடியோவை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதனை கிளிக் செய்ய வேண்டும்.




படிக்க: Fact Check | கொரோனாவால் இறந்தவர்களின் உடல் ஹெலிகாப்டரிலிருந்து கடலில் வீசப்பட்டதா?

படிக்க: பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை








வீடியோவில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்து சேவ் வீடியோ கொடுக்கவும். அந்த குறிப்பிட்ட வீடியோ உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்யப்படும். டிக்டாக்கில் உள்ள உங்களது தரவுகளையும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:

டிக்டாக் செயலிக்குள் நுழைந்த பின் வலதுபக்கம் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் privacy and safety > Personalization and data > Download your data என்பதை கிளிக் செய்யவும்

உங்களது கோரிக்கையை உறுதிப்படுத்தும் தகவலை டிக்டாக் செயலியில் காண்பிக்கப்படும்.

நீங்கள் உங்களது கோரிக்கையை உறுதி செய்யப்பட்ட டிக்டாக் உங்களது தரவுகள் பதிவிறக்கம் செய்வதற்கான கோரிக்கையை நிறைவு செய்ய 30 நாட்கள் எடுத்துக்கொள்ளும்

உங்கள் கோரிக்கை ஏற்றுக் கொண்ட உடன், நீங்கள் உங்கள் தரவுகளை 4 நாட்களுக்குள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் தரவுகளின் பைல் காலவதியாகி விடும்.

ஏற்கனவே உங்களது மொபைலில் டிக்டாக் செயலியை அன்இன்ஸ்டால் செய்து விட்டால் மேற்கண்ட பயனை பெற முடியாது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading