சபரிமலைக்குச் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ..

சபரிமலைக்குச் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ..

கோப்புப்படம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

  • Share this:
சபரிமலையில் மண்டல பூஜை நாளை மறுநாள் (டிசம்பர் 26) தொடங்குகிறது. இதனையொட்டி மாலை அணிந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 5,000 பேர் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், உரிய அனுமதி பெறாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் விண்ணப்பிப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் காவல்துறை இணைந்து புதிய வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பான கூடுதல் தகவல் பெற விரும்புவோர், பக்தர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள உதவி எண்ணான 702800100 என்பதை தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கான பதிலைப் பெற்றுக்கொள்ளலாம். சட்ட ஒழுங்கு தொடர்பாக கேரள காவல்துறை உதவி எண் 7025800100 -ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு விண்ணப்பிக்கும் முறை

STEP 1 : முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sabarimalaonline.org என்ற தளத்திற்குச் செல்லவேண்டும்.

STEP 2 : அங்கு இருக்கும் Register icon - ஐ கிளிக் செய்யவேண்டும்

அப்போது, திரையில் தோன்றும் சபரிமலை தரிசனம் ஆன்லைன் புக்கிங் Sample Q Coupon-ல் உங்களின் தகவல்களைப் பதிவிடவும்.

STEP 3 : உங்களின் முழு தகவல்களையும் பதிவிடவேண்டும்.

உங்கள் பெயர், பிறந்ததேதி, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை, மொபைல் எண், உங்களின் புகைப்படம் ஆகிய தகவல்களைப் பதிவிடவேண்டும்.

STEP 4 : OTP -ஐ உருவாக்குங்கள்.

நீங்கள் பதிவுசெய்த தொலைபேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் OTP வரும். அதனையும் உங்கள் இமெயிலையும் பதிவுசெய்யுங்கள். பின்னர் New password -ஐ உருவாக்குங்கள். தற்போது, தேவசம்போர்டில் முறையாக உங்கள் பெயரைப் பதிவுசெய்துவிட்டீர்கள்.

Also read: கிறிஸ்துமஸுக்கு அட்டகாசமா டிரஸ் போடணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

STEP 5 : புதிதாக தற்போது Log in செய்யுங்கள்.

நீங்கள் பதிவுசெய்த இமெயில் அல்லது மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாகின் செய்யுங்கள்.

STEP 6 : திரையில் QBooking அல்லது Darshan ஐகான் இருக்கும்.

சபரிமலை ஆன்லைன் இணையதளத்தில் லாகின் செய்தபிறகு Darshan Slot (Virtual Q), booking availability (Date) பகுதியில் நீங்கள் செல்லும் தேதியை பதிவிடவும்.

STEP 7 : குழுவினரின் தகவல்களைப் பதிவிடவும்.

இந்தப் பகுதியில் உங்கள் குழுவில் எத்தனை பேர் செல்கிறார்கள் என்ற விவரத்தைப் பதிவிடவேண்டும். பின்னர் Add Pilgrim ஐகானை கிளிக் செய்து உங்களுடன் செல்லும் நபர்களின் முழு தகவல்களைப் பதிவிடவேண்டும்.

STEP 8 : தேதியைத் தேர்தெடுக்கவும்

அனைத்து பதிவுகளும் நிறைவடைந்த பின்னர் Select Date and Time ஐகானை கிளிக் செய்யவேண்டும். அதில், நீங்கள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தரிசனம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை காட்டும்.

STEP 9 : ஆன்லைனில் கூடுதல் சேவைகள் நீங்கள் ஆன்லைனில் பதிவுசெய்யும்போது, Add Wishlist ஐகானை கிளிக் செய்தால் ஆன்லைனிலேயே அப்பம், ஆராவனா, அபிஷேக நெய் மற்றும் விபூதி ஆகியவைகளை வாங்கிக்கொள்ளலாம்.

STEP 10 : பதிவு நிறைவு.

கடைசியாக book now ஐகானை கிளிக் செய்தால், நீங்கள் பதிவுசெய்த பக்தர்களின் முழு தகவல்களுடன் Q-Coupon அல்லது Virtual Q-Coupon தயார் நிலையில் இருக்கும். அத்துடன் நீங்கள் பதிவுசெய்த தொலைபேசி எண்களுக்கும் இந்தத் தகவல்கள் சென்று சேரும்.

STEP 11 : ஆன்லைன் டிக்கெட்டை பிரதி எடுத்தல் (Print copy)

பின்னர், My Profile பகுதிக்கு சென்று நீங்கள் பதிவு செய்த பக்தர்களின் முழுத் தகவல்களுடன், பணப்பரிவர்த்தனை விவரத்தையும் காணலாம். மேலும், Wishlist ஐகானை கிளிக் செய்து பக்தர்களின் விவரமும், தரிசன நேரம் மற்றும் தேதி சரியாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். கடைசியாக ஆன்லைன் விண்ணப்பத்தை பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: