Home /News /how-to /

காற்று மாசுபாட்டிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான 7 எளிய வழிமுறைகள் இதோ..

காற்று மாசுபாட்டிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான 7 எளிய வழிமுறைகள் இதோ..

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு (படம்: ANI)

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு (படம்: ANI)

உலகை அச்சுறுத்திவரும் காற்று மாசுபாட்டிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

நம் கிரகத்தை சூழ்ந்துள்ள வளி மண்டலம் பல வாயுக் கலவைகளை உடையதாகும். இதில் 79% நைட்ரஜனும் 20% ஆக்சிஜனும், 3% கரியமிலவாயுவும், சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன. வாயுக்களின் இந்த சமச்சீர்நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளி மண்டலம் எவ்வித பாதிப்பும் அடையாது. தொழில்மயமாதல், நவீனமயமாதல் முதலியவற்றால் வளி மண்டலமானது பாதிப்படைகிறது, இவை காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன.

காற்று மாசுபாடு என்பது பல்வேறு திட துகள்கள் மற்றும் வாயுக்களின் கலவையாகும். அவை காற்றில் மாசுபடுத்தும் வடிவத்தில் மனிதர்களால் வெளியிடப்படுகின்றன. இந்த மாசுபாடுகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும் நம் சுற்றுப்புற சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும். காற்று மாசுபாட்டின் அபாயங்கள் உயிர்களுக்கு நோய்களையும் புவி வெப்பநிலை உயர்வையும் ஏற்படுத்தும்.

பொதுவான மாசுபடுத்திகளின் சில எடுத்துக்காட்டுகள் புகை, சூட் (soot), மகரந்தம் (pollen), மீத்தேன், மோல்ட் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகும். இவை தவிர வேறு பல பொதுவான மாசுபாடுகள் நமக்கும் நம் சார்ந்திருக்கும் கிரகத்திற்கும் தீங்கு விளைவிக்கும். வாகன வெளியேற்ற புகை, புதைபடிவ எரிபொருள், தொழில்துறை ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கள் ஆகியவற்றால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது.

மோசமான காற்றின் தரம் தீங்கு விளைவிக்கும். இது பல உயிர்களைக் கொல்லவும் செய்கிறது. உலக சுகாதார அமைப்பின் ஓர் உலகளாவிய கணக்கெடுப்பின்படி, மோசமான காற்றின் தரம் 2016ம் ஆண்டில் ஏற்பட்டதாகவும் அதில் 4.2 மில்லியன் அகால மரணங்கள் நிகழ்ந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்புற காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஒருவர் நினைக்கலாம். இருப்பினும், உட்புற புகை என்பது சுமார் 3 பில்லியன் மக்களுக்கு உயிர் எரிபொருள் (biomass), மண்ணெண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிப்பதன் மூலம் தங்கள் வீடுகளை சமைத்து வெப்பமாக்கும் ஒரு சுகாதார அச்சுறுத்தலாகும். இந்தியாவில் 65.53 சதவிகித மக்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களை சார்ந்து இருக்கிறார்கள்.டெல்லியின் கற்று மாசுபாடு

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. காற்றின் வேகம், அதன் கலவை உயரம் ஆகியவற்றின் பெருக்குத் தொகை அளவே காற்றோட்டக் குறியீடு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று தரத்தை பாதிப்பதில் இது கணிசமான பங்கு வகிக்கிறது. குளிர்காலங்களில் குளிர்ந்த, உலர்ந்த காற்று, நிலத்தை அடிப்படையாகக் கொண்டு சுழன்றடிக்கும் குறைந்த காற்று நிலை அதிகமாக காணப்படும்.

இதனால் காற்று தேங்கி விடுகிறது. காற்று பரவிச் செல்ல சாதகமற்ற சூழல் உருவாகிறது. குளிர்காலங்களில் இந்தியாவின் வடக்கு வடமேற்கு பகுதியில் இருந்து கிழக்கு முகமாக காற்று வீசுகிறது. இதனால் காற்று மாசுபாடும் பனிமூட்டமும் ஏற்படுகிறது. இதையடுத்து டெல்லியில் குறிப்பாக குளிர் காலங்களில், மிக அதிக அளவிலான பனிமூட்டம் ஏற்படுகிறது. உள்ளூர் அளவிலும், மண்டல அளவிலும் காற்று மாசுபாடு ஏற்படுவதால் இது மேலும் மோசமடைகிறது.

காற்று மாசுபாட்டை அகற்றுவதற்காக கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். இதனால் பதர்பூர் மின் நிலையம் மூடப்பட்டது, சோனிபட் மின் நிலையம் படிப்படியாக மூடப்பட்டது. காற்று மாசுபாடு குறைவாக உள்ள பிஎஸ் VI வாகனங்கள் எரிபொருள் தரம் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லியில் சுற்றுப்புற விரைவு வழிப்பாதையை விரைந்து நிறைவேற்றியது. ஈ-வாகனங்களுக்கு மானியம் வழங்கியது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசுகளும் மேற்கொண்டு வருகிறது.

Also read: ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிப்பு.. மதுரையில் 2 மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயால் நாசம்..

WHO -ன் தரவுப்படி உலகளாவிய வெளிப்புற காற்று மாசுபாடு

1. இறப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் நோய்களில் 29 சதவீதத்தை இந்த வெளிப்புற காற்று மாசுபாடு கொண்டுள்ளது.

2. கடுமையான குறைந்த சுவாச நோய்த்தொற்றின் இறப்பு மற்றும் நோய்களில் 17 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

3. பக்கவாதத்தால் ஏற்படும் இறப்புகளில் 24 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

4. இஸ்கிமிக் இதய நோயால் ஏற்படும் இறப்புகள் மற்றும் நோய்களில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

5. நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோயால் இறப்புகள் மற்றும் நோய்களில் 43 சதவீதத்தை இந்த வெளிப்புற காற்று மாசுபாடு கொண்டுள்ளது.

‘Chemical and Engineering News’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் டிமென்ஷியா, மன இறுக்கம் மற்றும் ஒருசில நரம்பியல் கோளாறுகளுக்கு காற்று மாசு எப்படி காரணமாகிறது என்பதை குறிப்பிட்டுள்ளனர். வெளிப்புற காற்று மாசுபாடு இன்று நம் வாழ்வில் ஒரு சகஜமாகிவிட்டது.

இருப்பினும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களில், காற்று மாசுபாட்டின் குறுகிய மற்றும் நீண்ட கால வெளிப்பாடாக நுரையீரல் செயல்பாடு குறைதல், சுவாச நோய்த்தொற்று மற்றும் மோசமான ஆஸ்துமாவுக்கு வழிவகுத்தல் போன்றவையை ஏற்படுத்துகிறது.

ஒரு கர்ப்பிணிப் பெண் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுகையில், பின்னர் அது பிரசவத்தின்போது எடை குறைந்த பிறப்பு, முன்கூட்டிய பிறப்பு மற்றும் சிறிய கர்ப்பகால காற்று பிறப்புகள் (small gestational air births) போன்ற கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, காற்று மாசுபாட்டிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும்.

Also read: புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.10 கோடி; புதிய வாக்காளர்கள் 31 லட்சம் பேர்

மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்

1. வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வானிலை அறிக்கைகள் மூலம் மாசு அளவை தினமும் சரிபார்த்தல்.

2. மாசு அளவு அதிகமாக இருக்கும்போது, வெளிப்புற பயிற்சிகள் அல்லது நடைகளைத் தவிர்த்தல்.

3. நம்மைச் சுற்றி அதிக வாகன போக்குவரத்துப் பகுதிகள் இருக்கலாம், ஒருவர் அந்த பகுதிகளில் உடற்பயிற்சி செய்வதையோ அல்லது நடப்பதையோ தவிர்க்க வேண்டும்.

4. காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் உங்கள் வீடுகளில் ஆற்றல் மூலங்களை (energy source) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தலாம். இது காற்று மாசுபாட்டைக் குறைத்து காற்றின் தரத்தை மேம்படுத்தவும் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

5. நடைபயிற்சி, மிதிவண்டியை பயன்படுத்துதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் அல்லது கார்பூலிங் செய்வது வாகனங்கள் வெளியிடும் வாயுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

6. மரம் அல்லது குப்பைகளை எரிக்க வேண்டாம். இது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வெப்பத்தை உருவாக்குகிறது.

7. வீட்டுக்குள் புகைப்பதை தவிர்க்கவேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ள காற்றின் தரத்தை சிறந்ததாக்குவது ஒட்டுமொத்த மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சுற்றுச்சூழலில் காற்று மாசுபாட்டின் தாக்கத்தையும் குறைக்கும் என்பதால் பொறுப்புடன் செயல்படுவோம்.
Published by:Rizwan
First published:

Tags: Air pollution, WHO

அடுத்த செய்தி