வாட்ஸ்அப்பில் மொபைல் எண்ணை சேவ் செய்யாமல் மெசெஜ் செய்வது எப்படி தெரியுமா..?
- News18 Tamil
- Last Updated: January 1, 2020, 8:45 PM IST
நமது மொபைலில் கான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலமாக மெசெஜ் அனுப்ப எளிய முறை உள்ளது.
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் பலரிடம் முக்கிய ஆப்களில் ஒன்றாக இருப்பது வாட்ஸ் அப். குறுஞ்செய்தி, புகைப்படம், ஆவணங்கள், வீடியோக்களை மற்றவர்களுக்கு மொபைலில் பகிர்வதற்கு வாட்ஸ்அப் முக்கியமான ஒன்றாக உள்ளது.
சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ் அப் தற்போது வேலை பார்க்கும் அலுவலங்களிலும் முக்கிய பங்காக உள்ளது. வாட்ஸ் அப்பை கணினியில் இணைத்து வாட்அப் வெப் (whtasapp web) மூலம் தகவல் பரிமாறுவர்பவர்கள் அதிகம். சில சமயங்களில் நமது செல்போன் கான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத 3வது நபருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறுவது சிக்கலாக இருக்கும். ஏனென்றால் வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு நாம் மெசெஜ் செய்ய வேண்டுமென்றால் அவரது மொபைல் எண் நம்முடைய கான்டெக்ட் லிஸ்ட்டில் இருக்க வேண்டும். ஆனால் கான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கு கணினி மூலம் வாட்ஸ் அப்பில் எளிதாக மெசெஸ் செய்ய முடியும்.
1. இணையதள லிங்கில் wa.me/91 என்று டைப் செய்து அதனை தொடர்ந்து தகவல் அனுப்ப வேண்டிய 10 இலக்க வாட்ஸ்அப் எண்ணை சமர்பிக்க வேண்டும்
(உதாரணத்திற்கு wa.me/9195455***39)2. அதை தொடர்ந்து whatsweb-ல் உள்நுழைவதற்கான அனுமதியை கேட்கும்
3. உங்கள் மொபைலில் உள்ள வாட்ஸ் அப் வெப்பை ஸ்கேன் செய்து உள்நுழைய வேண்டும்
4. அதன்பின் நீங்கள் எளிதாக உங்கள் தகவல்களை அந்த எண்ணுக்கு பகிர முடியும்
காண்டக்ட் லிஸ்ட்டில் இல்லாதவர்களுக்கு மொபைல் மூலம் வாட்ஸ் அப் மெசெஜ் செய்ய சில அப்கள் உள்ளன. கணினி மூலமாக எளிமையாக தகவல் பரிமாற இது எளிய வழியாக இருக்கும்.
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் பலரிடம் முக்கிய ஆப்களில் ஒன்றாக இருப்பது வாட்ஸ் அப். குறுஞ்செய்தி, புகைப்படம், ஆவணங்கள், வீடியோக்களை மற்றவர்களுக்கு மொபைலில் பகிர்வதற்கு வாட்ஸ்அப் முக்கியமான ஒன்றாக உள்ளது.
சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ் அப் தற்போது வேலை பார்க்கும் அலுவலங்களிலும் முக்கிய பங்காக உள்ளது. வாட்ஸ் அப்பை கணினியில் இணைத்து வாட்அப் வெப் (whtasapp web) மூலம் தகவல் பரிமாறுவர்பவர்கள் அதிகம். சில சமயங்களில் நமது செல்போன் கான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத 3வது நபருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறுவது சிக்கலாக இருக்கும்.