வாட்ஸ்அப்பில் எளிமையாக பணம் அனுப்புவது எப்படி? - இதோ முழு விவரம்..
வாட்ஸ்அப் வழியாக பணம் அனுப்பும் அம்சத்தைப் பெற்ற அந்த 20 மில்லியன் பயனர்களில் நீங்களும் ஒருவரா என்பதை அறிய உங்கள் தொலைபேசியில் வாட்ஸ்அப் ஆப்பை அப்டேட் செய்யவும்.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: November 10, 2020, 9:52 PM IST
யுபிஐ பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதற்கு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமான என்பிசிஐ அனுமதியளித்துள்ளது. எனவே கூகுள் பே மற்றும் போன் பேவை போலவே வாட்ஸ்அப்பிலும் பணம் அனுப்பும் வசதி தற்போது இந்தியாவிலுள்ள பயனர்களுக்கும் சாத்தியமாகியுள்ளது.
வாட்ஸ்அப் பே சேவை 10 பிராந்திய மொழிகளில் கிடைக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. பிடிஐ அளித்த தகவலின்படி இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (என்.பி.சி.ஐ) உத்தரவுகளின் காரணமாக, வாட்ஸ்அப் பணம் அனுப்பும் சேவையை 20 மில்லியன் பயனர்களுக்கு மட்டுமே உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1 ஜனவரி 2021 முதல் மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிவர்த்தனை 30 சதவிகிதம் என NPCI அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் வழியாக பணம் அனுப்பும் அம்சத்தைப் பெற்ற அந்த 20 மில்லியன் பயனர்களில் நீங்களும் ஒருவரா என்பதை அறிய உங்கள் தொலைபேசியில் வாட்ஸ்அப் ஆப்பை அப்டேட் செய்யவும். வாட்ஸ்அப் வழியாக உங்கள் நண்பர்கள்/ உறவினர்களுக்கு எவ்வாறு பணம் அனுப்புவது என்பது குறித்து இங்கு காண்போம். இந்தச் சேவை ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவது எப்படி?
முதலில், வாட்ஸ்அப் ஆப்பைத் திறந்து மேல் வலது மூலையிலுள்ள மூன்று புள்ளிகளைத் தட்டவும்.
இரண்டாவது, Select Payments> Add payment method> சென்று கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.
மூன்றாவது, உங்கள் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கைச் சரிபார்க்க, வாட்ஸ்அப் உங்கள் எண்ணுக்கு OTP அனுப்பும்.
நான்காவது, இப்போது பணத்தை அனுப்ப நீங்கள் அனுப்ப விரும்பும் நபரின் சாட்டைத் திறந்து அட்டாச்மெண்ட் ஐகானை தட்டி, பேமண்ட் என்பதைத் தேர்வுசெய்து, நீங்கள் அனுப்ப விரும்பும் பணத்தை குறிப்பிட்டு ஓகே செய்துவிடுங்கள்.
நீங்கள் அனுப்பிய பணம் குறித்த விவரம் வாட்ஸ்அப்பில் சாட் பகுதியில் ஒரு செய்தியாக இருக்கும்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

Starting today, people across India will be able to send money through WhatsApp 💸 This secure payments experience makes transferring money just as easy as sending a message. pic.twitter.com/bM1hMEB7sb
— WhatsApp Inc. (@WhatsApp) November 6, 2020