புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களின் Font-ஐ கண்டறிவது எப்படி?

புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களின் Font என்ன என்றும் பலர் ஆராய்ந்து இருப்பார்கள்.

news18
Updated: April 15, 2019, 9:57 PM IST
புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களின் Font-ஐ கண்டறிவது எப்படி?
ஃபான்ட்
news18
Updated: April 15, 2019, 9:57 PM IST
பலர் புகைப்படங்கள், விளம்பர பிரச்சாரங்கள் மற்றும் விளம்பர படங்களில் எழுத்துக்களையும் சேர்த்து அச்சிட்டு இருப்பார்கள். இப்படி புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களின் Font என்ன என்றும் பலர் ஆராய்ந்து இருப்பார்கள்.

எனவே புகைப்படங்களில் உள்ள எழுத்துக்களில் உள்ள Font என்ன என்று கண்டறிவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

Font Squirrel இணையதளம் மூலமாகப் புகைப்படத்தில் உள்ள எழுத்தின் Font-ஐ கண்டறிவது எப்படி?


1. புகைப்படம் அல்லது புகைப்படத்தின் URL இணைப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.
2. www.fontsquirrel.com/matcherator என்ற இணையதளத்திற்கு செல்க.

Loading...

3. Upload image என்பதை கிளிக் செய்து படத்தைப் பதிவேற்றவும். அல்லது படத்தின் URL-ஐயும் உள்ளிடலாம்.
4. பின்னர் படத்தில் எழுத்துள்ள பாகத்தை மட்டும் வெட்டிவிட்டு Matcherate It என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. பின்னர் அந்தப் புகைப்படத்திலிருந்து எந்தப் புகைப்படம் என்ற கணிப்புகள் பட்டியல் காண்பிக்கப்படும்.

போட்டோஷாப் மூலம் புகைப்படத்தில் உள்ள எழுத்தின் Font-ஐ கண்டறிவது எப்படி?


போட்டோஷாப்


1. போட்டோஷாப்பில் எழுத்துக்கள் உள்ள புகைப்படத்தைத் திறக்கவும்.
2. புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை Rectangular marquee tool-ஐ பயன்படுத்தி செலக்ட் செய்ய வேண்டும்.
3. எழுத்துக்களை Rectangular marquee tool-ஐ பயன்படுத்தி செலக்ட் செய்தபிறகு டூல்பாரில் உள்ள Type > Match Font என்பதை கிளிக் செய்வதன் மூலம் புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களைக் கண்டறியலாம்.

மேலும் பார்க்க:
First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...