இண்டேன் கேஸ் சிலிண்டரை மிஸ்டு கால் கொடுத்து எளிதாக புக் செய்வது எப்படி?

இண்டேன் கேஸ் சிலிண்டரை மிஸ்டு கால் கொடுத்து எளிதாக புக் செய்வது எப்படி?

இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் எளிய முறையில் கேஸ் புக் செய்யலாம்.

இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் எளிய முறையில் கேஸ் புக் செய்யலாம்.

 • Share this:
  இண்டேன் எரிவாயு சிலிண்டரை மிஸ்டு கால் மூலம் புக் செய்யும், புதிய வசதியை பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

  இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் எளிய முறையில் கேஸ் புக் செய்யலாம். கேஸ் முகவரிடம் நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் கேஸ் புக்கிங் செய்யப்படும். மற்ற எண்களிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து புக் செய்ய முடியாது. இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்ப்பட்டுள்ளது.

  இதன் மூலம் கேஸ் புக் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. மற்ற எந்த தகவலையும் பதிவு தேவையில்லை என்பதால் வயதனாவர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இந்த சேவை சிற்நததாக அமையும்.

  டெல்லியில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், தற்போது சென்னை, பெங்களூரூ, ஜைதராபாத் உள்ளிட்ட 7 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புவனேஷ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அங்கமாக மக்களுக்கான இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: