• HOME
  • »
  • NEWS
  • »
  • how-to
  • »
  • உங்கள் ஆதாரில் திருத்தம் செய்யவேண்டுமா? இத மட்டும் பண்ணா நிமிடத்தில் வேலை முடிஞ்சிரும்..

உங்கள் ஆதாரில் திருத்தம் செய்யவேண்டுமா? இத மட்டும் பண்ணா நிமிடத்தில் வேலை முடிஞ்சிரும்..

ஆதார் கார்ட்

ஆதார் கார்ட்

ஆதார் சேவை ஆன்லைன் அபாயின்ட்மென்டிற்கு எவ்வாறு முன்பதிவு செய்வது என்று தெரியவில்லையா ? இதை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

  • Share this:
பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை முழுமையாக வழங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களை போலவே, மத்திய அரசும் ஆதார் சேவை மையங்களை கடந்த 2019ல் தொடங்கியது. இந்த மையங்கள் ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே இடமாக திகழ்கிறது. மேலும் பாஸ்போர்ட்டுக்கு ஒத்த ஆன்லைன் சந்திப்பு முன்பதிவுகளும் இதில் உள்ளன. ஆதார் ஆன்லைன் அபாயின்ட்மென்ட் சேவைகள் மூலம் ஆதார் சேவை மையத்தை பார்வையிடுவதில் பயனர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பயனர்கள் ஆதார் அபாயின்ட்மென்ட் சேவைகளை பாஸ்போர்ட் துறை வழங்கும் சந்திப்பு வசதியுடன் ஒப்பிட்டு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பயனர்  ஒருவர் மொபைல் எண்ணைப் பார்வையிட்டு மாற்றுவதற்கான தனது அனுபவத்தை ட்வீட் செய்தார் மற்றும் ஆதார் சேவை மையத்தில் வழங்கப்படும் விரைவான சேவைகளைப் பாராட்டியுள்ளார். அந்த பதிவினை UIDAI அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளது.

அந்த பயனர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது, " வீட்டிற்கு அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் உள்ள ஆன்லைன் அபாயின்ட்மென்டை முயற்சிக்கவும். இது பாஸ்போர்ட் சேவை மையத்தை போன்றது மற்றும் டோக்கன்கள், காத்திருக்கும் நாற்காலிகள் ஆகியவற்றைக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. என் மகளுக்கு மொபைல் எண் மாற்ற ஒருவரைப் பார்வையிட்டேன், பணிகளை முடித்து 20 நிமிடங்களில் வெளியே வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க அல்லது உங்களிடம் இருக்கும் ஆதாரில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆன்லைன் அபாயின்ட்மென்ட் முன்பதிவு வசதிகளைத் அறிமுகம் செய்துவிட்டதால், இனி நீங்கள் வங்கி அல்லது தபால் அலுவலக வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு விருப்பமான ஒரு ஆதார் மையத்தில் UIDAI நடத்தும் ஆதார் சேவை மையம் பதிவாளர் நடத்தும் ஆதார் சேவை மையத்தில் சந்திப்பை எளிதாக பதிவு செய்யலாம். சந்திப்பை மேற்கொள்ள www.uidai.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

பின்வரும் சேவைகளைப் பெற நீங்கள் சந்திப்பை பதிவு செய்யலாம்:

* புதிய ஆதார் சேர்க்கை

* பெயர் புதுப்பிப்பு

* முகவரி புதுப்பிப்பு

* மொபைல் எண் புதுப்பிப்பு

* மின்னஞ்சல் ஐடி புதுப்பிப்பு

* பிறந்த தேதி புதுப்பிப்பு

* பாலின புதுப்பிப்பு

* பயோமெட்ரிக் (புகைப்படம் + கைரேகைகள் + ஐரிஸ்) புதுப்பிப்பு

ஆதார் சேவை ஆன்லைன் அபாயின்ட்மென்டிற்கு எவ்வாறு முன்பதிவு செய்வது?

1. ஆன்லைன் அபாயின்ட்மென்டிற்கு முன்பதிவு செய்ய, www.uidai.gov.in என்ற இணையத்தை பார்வையிடவும்.

2. "எனது ஆதார்" என்ற விருப்பத்தின் கீழ் தோன்றும் மெனுவில் இருந்து "ஒரு சந்திப்பை பதிவுசெய்க" (Book an Appointment) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. பிறகு ட்ராப்டவுன் மெனுவில் இருந்து நகரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுக்கவும். "அபாயின்ட்மென்டிற்கு தொடரவும்" (Proceed to Book Appointment) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

4.பின்னர் உங்கள் மொபைல் எண்ணை வழங்க வேண்டும், சரிபார்ப்புக்காக OTP உங்களுக்கு அனுப்பப்படும்.

5. உங்கள் ஆதார் விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

6.நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இறுதியில் உங்களுக்கான முன்பதிவு சந்திப்பு எண் வழங்கப்படும்.

7. பாஸ்போர்ட் சேவை மையத்தை போலவே, ஆதார் சேவை மையத்திலும் ஒரு டோக்கன் அமைப்பு உள்ளது. அதில் விண்ணப்பதாரர் முதலில் ஒரு டோக்கனைப் பெற்று, பின்னர் ஆவணச் சரிபார்ப்புக்கு 'வெரிஃபையரிடம்' செல்ல வேண்டும். சரிபார்ப்பை முடித்தவுடன், கட்டணம் செலுத்துவதற்காக 'பண கவுண்டர்களுக்கு' செல்ல வேண்டும். பதிவு இலவசம் என்றாலும், ஆதார் விவரங்களில் எந்தவொரு புதுப்பித்தலுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

8.விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆபரேட்டர் பணி நிலையங்கள் உள்ளன மற்றும் டோக்கன் எண் வழியாக வரிசையின் இயக்கம் திரைகளில் காண்பிக்கப்படும்.

இதன் மூலம் உங்கள் ஆதார் புதுப்பிப்பு முறைகள் விரைவில் மற்றும் எளிதில் நடைபெறும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: