UPI வழி பணப்பரிமாற்றங்கள் எப்படி வேலை செய்கிறதென்று தெரியுமா?

யுபிஐ பேமெண்ட் ஆப்

UPI இந்த வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அது என்ன, எப்படிச் செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்த UPI பற்றிய விவரங்களை இதில் முழுமையாக காண்போம்.

  • Share this:
வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் நீண்ட ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமானது தான் இந்த UPI. அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு.  யுபிஐ (UPI) என்றால் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payment Interface (UPI)). 

ஒருவரின் மொபைல் போன் வழியாக ஒரு பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து இன்னொரு பேங்க் உடனடியாக பணத்தை மாற்ற இது அனுமதிக்கிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமே ஆப்ஸின்  மூலம் பணம் செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24x7 அடிப்படையில் செயல்படுகிறது.

NPCI என்றால் என்ன (What is NPCI) : 

இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் (National Payments Corporation of India(NPCI)) என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துகிறது.  

UPI-ஐ எப்படி பயன்படுத்த வேண்டும் (How to use UPI) : 

யுபிஐ (UPI) பயன்படுத்த, நீங்கள் ஒரு பேங்க் அக்கவுன்ட் (Bank account) வைத்திருக்க வேண்டும், அதாவது, யுபிஐ (UPI) வசதியைப் பயன்படுத்த உங்கள் பேங்க் உங்களை அனுமதிக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), எச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (State Bank of India (SBI), HDFC Bank, and ICICI Bank) போன்ற பேங்க்களில் பேங்க் அக்கவுன்ட்டை வைத்திருக்க வேண்டும். 

உங்கள் பேங்க் யுபிஐ பேமெண்ட்டுகளை சப்போர்ட் செய்கிறதா, என்பதை நீங்கள் செக் செய்து பார்த்தவுடன், உங்கள் ஸ்மார்ட்போனில் யுபிஐ சப்போர்ட் ஆப்ஸைப் டவுன்லோட் செய்ய வேண்டும். யுபிஐ மூலம் பணம் செலுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களில் BHIM முக்கியமானது, இது NPCI ஆல் உருவாக்கப்பட்டது, மேலும் சில தனியார் ஆப்ஸ்களிளும் இத்தகைய பேமெண்ட்டுகளை நீங்கள் மேற்கொள்ள முடியும்.

அதிலும் குறிப்பாக பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே, அமேசான் பே (Paytm, PhonePe, Google Pay, Amazon Pay) போன்றவை மக்களிடையே பிரபலமானவை. வெரிஃபிகேஷனுக்காக உங்கள் மொபைல் எண்ணை உங்கள் பேங்க் அக்கவுன்ட்டில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை முதலில் நினைவில் கொள்க. 

UPI- PIN மற்றும் M- PIN (Difference between UPI-PIN and M-PIN) : 

UPI- PIN என்பது 4-6 இலக்க குறியீடாக இருக்கும், இது BHIM ஆப்ஸில் முதல் முறையாக நீங்கள் பதிவு செய்யும்போது உருவாக்கப்படுவதாகும். UPI பண பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு இந்தக் குறியீட்டை நீங்கள் பயன்படுத்தலாம். M- PIN என்ப‌தோ பேங்க்களால் தங்களது கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது. இந்த இரண்டில் உங்களது தேவை மற்றும் பயன்படுத்தும் ஊடகத்திற்கு ஏற்ப இரண்டையும் பயன்படுத்தலாம்.

UPIஐ அமைப்பது எப்படி (How to set up UPI) : 

தேர்ந்தெடுக்கப்பட்ட யுபிஐ ஆப்ஸை நீங்கள் டவுன்லோட் செய்தவுடன், கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து உங்கள் பேங்க்கைத் தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் பேங்க் அக்கவுன்ட் என்பதை சரிபார்க்க, உங்கள் பேங்க் உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) அனுப்பும். OTP சரிபார்க்கப்பட்டதும், உங்கள் மெய்நிகர் கட்டண முகவரி (Virtual Payment Address (VPA) உருவாக்கப்படும். UPI இரண்டு பேங்க் அக்கவுன்ட்களுக்கும் இடையில் உடனடியாகப் பணப் பரிவர்த்தனையை அனுமதிக்கிறது. UPI ஆனது ஏற்கனவே உள்ள IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

BHIM என்றால் என்ன (What is BHIM) : 

BHIM (Bharat Interface for Money) UPI சாதாரண அக்கவுன்ட்களுக்குப் பரிவர்த்தனை செய்ய உதவுவது. பேலன்ஸ் மற்றும் ஏனைய தகவல்களுக்கும் இது பயன்படுகிறது. IMPS-ஐ விட இது விரைவானது. 

BHIM ஆப்ஸைப் பயன்படுத்தி யுபிஐ  கணக்கை எவ்வாறு அமைக்கலாம்:-

படி 1: Google Play Store அல்லது Apple App Store இலிருந்து BHIM ஆப்ஸை இன்ஸ்டால் செய்யவும்.

படி 2: உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: பேங்க்கில் பதிவு செய்யப்பட்ட சிம்மை (SIM) தேர்ந்தெடுக்கவும்.

படி 4: இப்போது நான்கு இலக்க உள்நுழைவு கடவுச்சொல்லை (four-digit login password) அமைக்கவும். ஆப்ஸை அணுக இந்த நான்கு இலக்க கடவுச்சொல்லை நீங்கள் உள்ளிட வேண்டும்.

படி 5: பின்னர் உங்கள் பேங்க் அக்கவுன்ட்டைத் தேர்ந்தெடுத்து இணைக்கவும். உங்கள் டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கங்களையும்  காலாவதி தேதியையும் வழங்குவதன் மூலம் உங்கள் UPI PIN ஐ நீங்கள் எளிதாக அமைக்கலாம்.

உங்கள் அக்கவுன்ட் வெற்றிகரமாக பதிவுசெய்யப்பட்ட பின், இப்போது பணத்தை வேறொருவருக்கு அனுப்பலாம் அல்லது அவர்களிடத்திலிருந்து பணத்தை கோரலாம். உங்கள் மொபைல் வேலட்டை (Mobile Wallet) யுபிஐ உடன் இணைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பேங்க் அக்கவுன்ட்களை யுபிஐ உடன் இணைக்கலாம். 

யுபிஐ வழியாக பணத்தை அனுப்புவது எப்படி (How to transfer money via UPI) : 

UPI வழியாக பணத்தை மாற்ற மூன்று வழிகள் உள்ளன - ரிசீவரின் மெய்நிகர் கட்டண முகவரி (VPA), அக்கவுன்ட் எண் மற்றும் IFSC குறியீடு அல்லது QR குறியீட்டை உள்ளிடுவதன் மூலம் பணத்தை எளிதாக நீங்கள் ட்ரான்ஸ்பர் செய்யலாம். UPI ல் இரண்டடுக்குப் பாதுகாப்பு முறை (2FA) பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் ஒரு ATMல் பணம் எடுக்கிறபோது உங்கள் ATM கார்டு முதல் காரணியாகவும் உங்களின் பாஸ்வேர்ட் இரண்டாவது காரணியாகவும் கொள்ளப்படுகிறது. அதே போல இதில் NCPI ஆப் BHIM மூலம் UPI குறியீடும் பேங்க் மூலம் MPIN குறியீடும் தரப்படுகிறது.

பணத்தை ட்ரான்ஸ்பர் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு (The maximum limit on the transfer of money) :

NPCI வலைத்தளத்தின்படி, தற்போது, யுபிஐ பரிவர்த்தனைக்கு வரம்பு ஒரு கணக்கிற்கு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் ஆகும். இந்த உயர் வரம்பிற்குள் (High Limits), வெவ்வேறு பேங்க்களுக்கு அவற்றின் சொந்த துணை வரம்புகள் இருக்கலாம், எனவே உங்கள் பேங்க் எம்மாதிரியான வரம்புகளை கொண்டுள்ளது என செக் செய்து பாருங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: