உங்களுக்கு திறமை இல்லையென எண்ணம் வருகின்றதா? இதோ உங்களுக்கான தேடல்!

இவ்விதம் எண்ணங்களை கொண்டிருப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், இவ்வுலகில் பிறகும் பொழுது எவருக்கும் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது.

உங்களுக்கு திறமை இல்லையென எண்ணம் வருகின்றதா? இதோ உங்களுக்கான தேடல்!
இவ்விதம் எண்ணங்களை கொண்டிருப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், இவ்வுலகில் பிறகும் பொழுது எவருக்கும் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது.
 • Share this:
சிலருக்கு வாழ்வில் சிறப்பான திறமை இல்லை எனும் எண்ணமும், தனக்கான திறமையை கண்டறிய முடியாமலும் சிக்கி தவிப்பர். தனக்கென எவ்வித நோக்கமும் இல்லாமல் இருப்பது போல் எண்ணம் தோன்றும்.

 • இவ்விதம் எண்ணங்களை கொண்டிருப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வுலகில் பிறகும் பொழுது எவருக்கும் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது. • இந்த மனிதர்கள் மிகவும் திறமை மிக்கவர். நான் திறமை அற்றவர் எனும் எண்ணத்தை முதலில் உங்கள் மனதில் இருந்து எடுத்து விடுங்கள்.

 • உங்கள் திறமையை மற்றவர் பாராட்டுவர் என எண்ணிக்கொண்டு இல்லாமல், உங்களை நீங்களே பாராட்ட பழகி கொள்ளுங்கள் • யாரையும் உங்களுடன் ஒப்பிடாதீர்கள். உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை நீங்கள் செய்யுங்கள்.

 • மற்றவர்களை பாதிக்காத எந்த விஷயமானாலும் அதனை நீங்கள் தைரியமா செய்யலாம்

 • உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள், புத்தகம் படிப்பது, பிறருடன் பேசுதல், இசையை ரசிப்பது, இயற்கையை ரசிப்பது என உங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.
 • உங்களுக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியோடு வேலை செய்யுங்கள்.

 • நீங்கள் செய்யும் வேலையை நீங்களே பாராட்டுங்கள். உங்களுக்கு திறமை இல்லையென நீங்களே சோர்வடையாதீர்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களின் மீது கவனம் செலுத்துங்கள்.

 • அதில் உங்கள் திறமை ஒளிந்திருக்கும். அதனை முழு முயற்சியோடு செய்து பாருங்கள். நிச்சயம் ஒரு நாள் உங்கள் திறன் பிறரால் புகழப்படும். அதுவரை உங்கள் திறனை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். உங்களை நீங்களே தாழ்த்தி சோர்வடைய விடாதீர்கள்.

 • திறனை தேடி ஓடி தனிமனித மகிழ்ச்சியை இழந்து விடாதீர்கள். உங்களுக்கு பிடித்த உங்களை மகிழ்விக்கும் விஷயங்களை முதலில் செய்யுங்கள் உங்கள் திறனை உங்களால் அடையாளம் காண இயலும்.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories