உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை சீனா கட்டுப்படுத்தியது எப்படி..?

அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை சீனா கட்டுப்படுத்தியது எப்படி..?
அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டது.
  • Share this:
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், அந்நோயின் தாக்கம் அதிரடியாக குறைந்து வருகிறது. நோய் பரவலைத் தடுக்க சீனா எடுத்த நடவடிக்கைகளை உலக சுகாதார மையம் வெகுவாக பாராட்டியுள்ளது. 

சீனாவின் ஊஹானில் டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி முதல்முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. ஆனால் இதற்கான நடவடிக்கையை அந்நாடு ஜனவரி 14- ஆம் தேதி வரை தொடங்கவேயில்லை. சார்ஸ் போன்ற வைரஸ் பரவுவதாக எச்சரித்த மருத்துவர் லி வென்லியாங்-க்கு தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் அவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இறந்தார். கொரோனா வைரஸ் தாக்குதலால், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்க சுதாரித்துக் கொண்ட சீன அரசு, போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

ஜனவரி 23- ஆம் தேதி முதல் சுமார் 93 கோடி மக்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் உடல் வெப்பம் கண்டறியப்பட்டு அவர்களின் பயண விவரங்கள் குறித்த தகவல்கள் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டன.


வைரஸ் பரவல் அதிகமாக இருந்த பகுதிகளில் இருந்த மக்களில் ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே பிற இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. மக்களுக்கு உணவு விநியோகம் மற்றும் மருத்துவமனைகளுக்கு மருந்துகள் கொண்டு செல்ல பிரத்யேகமாக ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டனர். அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இணையம் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன.ஹெல்த் கோட் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, மக்கள் வசிக்கும் இடத்தின் வைரஸ் தாக்குதலின் வீரியத்திற்கு ஏற்ப பச்சை, மஞ்சள், சிகப்பு வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. பல முன்னனி நிறுவனங்கள், முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பணியாட்களின் உடல் வெப்பத்தை கண்டுபிடித்தன.முகக்கவசம் அணியாதவர்களும் இத்தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டனர். அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் அரசின் கட்டுபாடுகளை மீறுபவர்கள் குறித்து புகார் அளிக்க சமூக வலைதளங்கள் அனுமதி அளித்தன.
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories