பிரபாகரன் மது, போதையை விரும்பாதவர் - சிறீசேனவுக்கு முன்னாள் தளபதி ஃபொன்சேகா பதிலடி

விடுதலைப்புலிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே நடந்த யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில், ஃபொன்சேகா இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தார்.

பிரபாகரன் மது, போதையை விரும்பாதவர் - சிறீசேனவுக்கு முன்னாள் தளபதி ஃபொன்சேகா பதிலடி
பிரபாகரன்
  • News18
  • Last Updated: July 5, 2019, 9:21 AM IST
  • Share this:
விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் போதைப்பொருட்கள் கடத்தி அதில் வருமானம் பெற்றதாக, இலங்கை அதிபர் சிறிசேன கூறியிருந்தற்கு, முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா பதிலடி கொடுத்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது எனவும், போதைப் பொருள் வர்த்தகத்தின் மூலம்தான் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கிப் போர் நடத்தினார் எனவும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிசேனவின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் ராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் ஃபொன்சேகா, தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதமேந்தி போராடிய பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இறுதிவரை கொள்கையில், உறுதியாக நின்று மரணித்தனர். அப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக் கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம் என கூறியுள்ளார்.


மைத்ரிபால சிறிசேனா (AP/PTI)


“பிரபாகரன் மது, போதையை விரும்பாதவர். அதற்கு அவர் எதிரானவர். போர்க்காலங்களில் இது எமக்கு நன்கு தெரியும். அவர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு இந்தியா, கனடா, சுவிஸ், ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் என உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் நிதி உதவிகளை வழங்கினார்கள். அந்த நிதிகள் மூலம்தான் போராட்டத்தைப் பிரபாகரன் முன்னெடுத்தார். அந்த நிதிகள் மூலம்தான் நவீன ரக ஆயுதங்களைக் கூட வெளிநாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் கொள்முதல் செய்தனர்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் விற்பனை கொடிகட்டிப் பறக்கவில்லை. போர் முடிந்த பின்னர்தான் வடக்கில் போதைப் பொருள் விற்பனை தலைவிரித்தாடுகின்றது.
சரத் ஃபொன்சேகா


இலங்கை படைகளுடன் விடுதலைப் புலிகள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக அவர்களையும் அவர்களின் போராட்டத்தையும் கேவலப்படுத்தி கருத்துக்களை வெளியிடக்கூடாது,” என்று ஃபொன்சேகா கூறியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே நடந்த யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில், ஃபொன்சேகா இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தார். போர் முடிந்த பின்னர், மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதனை அடுத்து, சில ஆண்டுகளாக அரசியல் கைதியாக சிறையில் வைக்கப்பட்டு பின்னர், சிறிசேனா அதிபரானதும் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories