’வைட்டமின் A’ உணவுகளை அதிகமாக உட்கொண்டால் சரும புற்றுநோயைத் தடுக்கலாம்

வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, நீளமான கேரட் இரண்டில் ஏதேனும் ஒன்றை தினமும் உண்டு வந்தாலும் போதுமானது.

’வைட்டமின் A’ உணவுகளை அதிகமாக உட்கொண்டால் சரும புற்றுநோயைத் தடுக்கலாம்
’வைட்டமின் A’
  • News18
  • Last Updated: August 28, 2019, 3:23 PM IST
  • Share this:
சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் வைட்டமின் A நிறைந்த உணவுகளை தினமும் ஏதேனும் ஒரு வகையில் உண்டு வந்தால் சரும புற்றுநோயைத் தடுக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது சருமப் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய கார்சினோஜெனிக் செல்களின் உற்பத்தியை தடுக்கக் கூடிய ஆற்றல் வைட்டமின் A சத்தில் அதிகம் இருப்பதாகவும் அது கிருமிகளின் உயிர்க் கொல்லியாக செயல்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சருமப் புற்றுநோய் என்பது அதிக வெள்ளை நிற சருமம் கொண்டோரையே எளிதில் தாக்குகிறது. அவர்கள் வைட்டமின் A நிறைந்த பழங்கள் , காய்கறிகளை ஏதேனும் ஒரு வகையில் தினமும் உட்கொள்வது நல்லது என்கின்றனர். அதேபோல் வைட்டமின் A சத்தை பழங்கள், காய்கறிகள் வழியாக எடுத்துக்கொள்வதே நல்லது. அதுதான் எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது என்றும் கூறியுள்ளனர்.
இந்த ஆய்விற்காக கிட்டத்தட்ட 1,25000 பேரை நீண்ட நாட்கள் பரிசோதித்துள்ளனர். இந்த ஆய்வில் தலைமுடியின் நிறம், சூரிய கதிர்களின் பாதிப்பு, குடும்பத்தில் புற்றுநோய் வரலாறு என இப்படி பல கேள்விகளை முன் வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

வைட்டமின் A நிறைந்த வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, நீளமான கேரட்  இரண்டில் ஏதேனும் ஒன்றை தினமும் உண்டு வந்தாலும் போதுமானது என அறிவுரையும் கூறுகிறது ஆய்வு.

Loading...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...