இந்தியர்கள் சாப்பிடும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நிலை என்ன? எச்சரிக்கும் ஆய்வறிக்கை

இந்தியா போன்ற வளரும் நாடுகள் கெட்ட கொழுப்பு, உப்பு , சர்க்கரை கலப்படத்தை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியர்கள் சாப்பிடும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நிலை என்ன? எச்சரிக்கும் ஆய்வறிக்கை
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
  • News18
  • Last Updated: August 28, 2019, 6:24 PM IST
  • Share this:
ஆரோக்கியமான பொட்டல உணவுகளை சாப்பிடும் பட்டியலில் உலக அளவில் இந்தியா மிகக் குறைந்த தரத்தில் இருப்பதும் உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பொட்டல உணவுகள் ஆற்றல் மிகக் குறைவான அளவில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜார்ஜ் மையம் உலக ஆரோக்கியம் என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில் 4,00,000-க்கும் மேற்பட்ட பொட்டல உணவுகளை 12 நாடுகளில் ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் ஒவ்வொரு உணவுப் பொட்டலத்திலும் உள்ள ஊட்டச்சத்தின் அளவை கண்கானித்துள்ளது. அதாவது உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட கொழுப்பு , புரோட்டீன், கலியம், நார்சத்து இவற்றை பிரதான சத்துகளாக கருத்தில் கொண்டு ஆய்வு நடத்தியுள்ளது. அதில்; 1/2 முதல் 5 வரை ரேட்டிங் அளித்துள்ளது.

அதில் இங்கிலாந்து முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் , ஆஸ்திரேலியா மூன்றாவது இடமும் பெற்றுள்ளன. அதில் இந்தியா மிகக் குறைவான அதாவது 2.27 என்ற ரேட்டிங் ஸ்டார் பெற்று குறைந்த இடத்தைப் பெற்றுள்ளது.


இதில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் ஆரோக்கியமற்றதாக இருக்கின்றன. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் நிலையில் இதை கவனத்தில் கொள்வது அவசியம் எனவும் எச்சரிக்கிறது. இந்த உணவுகள் கெட்டக் கொழுப்புகள், சர்க்கரை, உப்பு அதிகமாகக் கலப்பது அதிகளவிலான உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கின்றன. இதனால் எந்தவிதமான நோய்களும் வரக்கூடும் எனவும் கூறியுள்ளது.இதில் அதிக கெட்ட கொழுப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கும் நாடுகளில் சீனா முதல் இடம் பெற்றுள்ளது. அதிக ஆரோக்கியமற்ற உப்பு சேர்க்கும் நாடுகளில் கனடா முதல் இடமும் அதில் சர்க்கரை சேர்க்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடமும் பெற்றுள்ளது. அதாவது இந்தியா தயாரிக்கும் பதப்படுத்தப்பட்ட பொட்டல உணவுகளில் 100 கிராமிற்கு 7.8 கிராம் சர்க்கரை சேர்ப்பதாகக் கூறியுள்ளது.

Loading...

இந்தியா போன்ற வளரும் நாடுகள் கெட்ட கொழுப்பு, உப்பு , சர்க்கரை கலப்படத்தை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதை அந்நாட்டின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைச்சகங்கள் கண்காணித்து மக்கள் நலனை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும். ஏனெனில் இவை சிறு குறு கிராமங்கள் தொடங்கி நகரங்கள் முழுவதும் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர்களின் மூலப்பொருள் தரத்தை ஆய்வு செய்து கணக்கிடப்பட்டுள்ள அளவில் உணவுகளை தயாரிக்க அந்நாடுகளின் கூட்டு முயற்சி அவசியம் என விவேகானந்த் ஜா குறிப்பிடுகிறார். இவர் ஜியார்ஜ் மையத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநராவார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...