வெயிலை சமாளிக்க சோனம் கபூர் பரிந்துரைக்கும் மாம்பழ ரெசிபி!

மாம்பழம் எப்படிச் சாப்பிட்டாலும் சுவை நிறைந்ததுதான்.

news18
Updated: May 10, 2019, 2:53 PM IST
வெயிலை சமாளிக்க சோனம் கபூர் பரிந்துரைக்கும் மாம்பழ ரெசிபி!
மாம்பழ ரெசிபி
news18
Updated: May 10, 2019, 2:53 PM IST
சொல்லில் அடங்கா சுவை கொண்ட மாம்பழம் எப்படிச் சாப்பிட்டாலும் சுவை நிறைந்ததுதான். அதை இன்னும் சுவை கூட்ட இப்படிச் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

அதுவும் பாலிவுட் நாயகி சோனம் கபூர் தனக்குப் பிடித்த உணவு என பரிந்துரைத்து தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ரெசிபியை பலரும் வீட்டில் செய்து அதைப் புகைப்படமெடுத்து பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் புகைப்படமெடுத்து அப்லோட் செய்யத் தயாராகுங்கள்.

தேவையான பொருட்கள் :


மாம்பழ சதை - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
புளூ பெர்ரி - 1/2 கப்

Loading...செய்முறை :

தோலை நீக்கி மாம்பழத்தின் சதைப் பகுதியை மட்டும் தனியாக சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

நறுக்கிய  மாம்பழத்தை  குச்சி ஐஸ் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாவில்  போடவும். அதை ஃப்ரீஸரில் இறுகும் வரை வைக்கவும்.

இறுகியதும் அதை வெளியே எடுத்து அதில் நீர் நிரப்பி உலர்ந்த அல்லது பழமாக இருக்கும்  புளூ பெர்ரியை கொட்டி ஒரு கலக்கு கலக்குங்கள். தற்போது ஐஸ் குச்சியை சொருகுங்கள்.

மீண்டும் ஃப்ரீசரில் வைத்து இறுகியதும் எடுத்துச் சுவையுங்கள்.

இதையும் படியுங்கள் :

இஞ்சி டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா ?

மதிய உணவை சுலபமாக்கும் இன்ஸ்டண்ட் புளியோதரைப் பொடி
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...