நம்பிக்கையின் உச்சம் : மூன்று சக்கர வாகனத்தில் ஃபுட் டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி!

என்னடா வாழ்க்கை என்று புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற மனிதர்களால் ஊக்கமும் உற்ச்சாகமும் ஏற்படுகிறது.

news18
Updated: May 22, 2019, 1:51 PM IST
நம்பிக்கையின் உச்சம் : மூன்று சக்கர வாகனத்தில் ஃபுட் டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி!
ஃபுட் டெலிவரி செய்யும் மாற்றுத் திறனாளி
news18
Updated: May 22, 2019, 1:51 PM IST
என்னடா வாழ்க்கை என்று புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்ற மனிதர்களின் செயல்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிய வைக்கிறது. அவர்கள்தான் வாழ்க்கையோடு எதிர்நீச்சல் போடும் ஹீரோக்களாகவும் தெரிகின்றனர்.

இன்று இந்தியா முழுவதும் புதிய வேலை களைக்கட்டத் தொடங்கியுள்ளது என்றால் அது ஃபுட் டெலிவரி வேலைதான். குறிப்பாக இளைஞர்களை மட்டுமன்றி பெண்களையும் கவர்ந்துள்ளதுதான் ஆச்சரியம். அப்படி இன்று பல பெண்களும் ஃபுட் டெலிவரி உமனாக வேலை செய்து தன் சொந்தக் காலில் நிற்கின்றனர்.

ஆண்களுக்கு நிகரான சமத்துவத்தைப் பெண்கள் தற்போது முன்னெடுத்து வருவதால், அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், தற்போது முளைத்திருக்கும் மற்றொரு ஆச்சரியம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது.
Loading...ஆம், ராஜஸ்தானைச் சேர்ந்த ராமு ஜி என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர், ஸொமாட்டோ நிறுவனத்தின் ஃபுட் டெலிவரி பாயாக வேலை செய்கிறார். தன்னுடைய மூன்று சக்கர வாகனத்தின் முன்புறம் டெலிவரிக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொட்டலப் பையை வைத்துக்கொண்டு விரைந்து கொடுக்க வேண்டிய காரணத்தால் வேகமாக ஓட்டிக்கொண்டு செல்கிறார்.

இதைக் கண்ட அப்பகுதி இளைஞர் ஒருவர் அவரை வீடியோ எடுத்து இவர் என்னுடைய நாளை அர்த்தமாக்கியுள்ளார். இவர்களைப் போன்றவர்களைக் காணும்போது வாழ்க்கையில் ஊக்கமும், உற்சாகமும் பிறக்கிறது என்று எழுதி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் ரீட்வீட் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க :

சம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்!

ஸ்விம்மிங் பூல் தண்ணீராலும் உடலுக்கு ஆபத்து : என்னென்ன நோய்களை சந்திக்க நேரிடும் ?
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...