பாலுக்கு மாற்றாக ஓட்ஸ் பாலிற்கு மாறும் இந்தியர்கள்... உடலுக்கு நல்லதா.. கெட்டதா..?

ஓட்ஸ் பால் குடிப்பதால் நீண்ட நேரத்திற்கு பசியும் எடுப்பதில்லை.

Web Desk | news18
Updated: July 18, 2019, 9:56 PM IST
பாலுக்கு மாற்றாக ஓட்ஸ் பாலிற்கு மாறும் இந்தியர்கள்... உடலுக்கு நல்லதா.. கெட்டதா..?
ஓட்ஸ் பால்
Web Desk | news18
Updated: July 18, 2019, 9:56 PM IST
பால் உட்கொள்வது நல்லதல்ல என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகள் பால் உடல் நலனுக்கு அவசியம் என்கின்றன.

நல்லதோ கெட்டதோ மக்கள் பாலுக்கு மாற்றை விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.

அதற்கு உதாரணம்தான் ஓட்ஸ் பாலுக்குக் கிடைத்திருக்கும் டிமாண்ட். ஓட்ஸ் மட்டுமல்ல பாதாம் பால், சோயா பீன்ஸ் பால் என ஒட்ஸுக்கு முன் இவை சந்தையில் கல்லா கட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

சரி.. ஓட்ஸ் மில்கை மக்கள் தேர்வு செய்ததற்கு மற்றொரு காரணம் டயட். டயட் இருப்போர் கொழுப்பு உணவுகளை முற்றிலும் தவிர்ப்பார்கள். அதில் பாலும் முக்கிய அங்கம் என்பதால் டயட் விரும்பிகளுக்கு ஓட்ஸ் மில்க் நல்ல மாற்றாக இருக்கிறது.

முக்கியமாக ஓட்ஸில் இயற்கையாகவே சற்று இனிப்புச் சுவை மற்றும் நட்ஸ் சுவை, மணம் இருப்பது குடிப்பதற்கு நல்ல பானமாக இருக்கிறது. ஓட்ஸ் பால் குடிப்பதால் நீண்ட நேரத்திற்கு பசியும் எடுப்பதில்லை. பாலில் போடுவது போல் கேப்பசினோ, காஃபி, கோல்ட் காஃபி என ஃபேன்சி பீவரேஜஸ் என்று சொல்லப்படும் பானங்களும் இதில் தயாரித்துக் குடிக்கலாம்.சுவை மட்டுமல்லாது ஓட்ஸ் பால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் இதில் நிறைவுற்ற கொழுப்புக் கலவை முற்றிலும் இல்லை. கொழுப்புச் சத்து இல்லை. ஆனால் ஒரு கப் மாட்டுப் பாலில் 24 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது.

மாட்டுப் பாலைப்போல் ஓட்ஸ் பாலிலும் விட்டமின் A மற்றும் D நிறைந்துள்ளன. இதுதவிர நார்சத்து, கார்போஹைட்ரேட் சத்து, புரதச் சத்து என விட்டமின் , மினரல்களும் உள்ளன.
இருப்பினும் மாட்டுப் பாலில் கிடைக்கக் கூடிய உடலுக்குத் தேவையான சில மினரல்கள் பதப்படுத்தப்படும்போது குறைந்துவிடும். இதற்கு ஈடு செய்ய உங்கள் டயட்டில் கவனம் தேவை. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

குறிப்பாக புரோட்டின் சத்து இதில் குறைவாக இருக்கும் என்பதால் அதற்கு ஈடு செய்ய உணவுகள் மூலம் புரோட்டினை உட்கொள்வது அவசியம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...