மோடி பதவியேற்புக்காக 48 மணி நேரத்துக்கு முன்பே தொடங்கிய சமையல்! என்ன மெனு தெரியுமா?

” டால்  ரைசினா " உணவு குடியரசு தலைவர் மளிகையின் செஃப் ஆன மெச்சின்ரா கஸ்தூரியால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vaijayanthi S | news18
Updated: May 30, 2019, 1:24 PM IST
மோடி பதவியேற்புக்காக 48 மணி நேரத்துக்கு முன்பே தொடங்கிய சமையல்! என்ன மெனு தெரியுமா?
டால்  ரைசினா
Vaijayanthi S | news18
Updated: May 30, 2019, 1:24 PM IST
மோடி இன்று 2-வது முறையாக பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பாகச் நடைபெற்று வருகின்றன. மேலும் விழாவில் கலந்துக்கொள்ளும் விருந்தினர்களுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே சமையல் ஆரம்பமாகிவிட்டது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. விழா தொடங்குவதற்கு முன், விருந்தினர்களுக்கு சமோசா உள்ளிட்ட பலகாரங்களுடன் ஹை டீ வழங்கப்படுகிறது. பதவி ஏற்பு விழா முடிந்ததும், பிரமாண்ட விருந்து நடைபெறும்.

மோடிஅதில் வெஜ் உணவுகள் மற்றும் சிக்கன், மட்டன், கடல் உணவு உள்ளிட்ட அசைவ உணவுகளும் விருந்தினர்களுக்குப் பரிமாறப்படும். குடியரசுத் தலைவர் மாளிகையின் சிறப்பு உணவாகக் கருதப்படும் ” டால்  ரைசினாவும் ” விருந்தினர்களுக்குச் சமைத்து வழங்கப்பட உள்ளது.

இன்று மாலை 7 மணிக்கு விழா நடைபெறும் நிலையில், டால் ரைசினா தயாரிக்கும் பணி 48 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கிவிட்டது. அதாவது கடந்த செவ்வாய்கிழமை இரவு முதலே அதற்கான வேலையை தொடங்கிவிட்டானர். மேலும் சைவ மற்றும் அசைவ உணவுகளில் தயார்படுத்தப்படுத்தப்படும் ராஜ்போக், வெஜ் தாலி, போன்றவை இந்த விருந்தின் முக்கிய அம்சங்கள்.

ராஷ்டிரபதி பவன்


Loading...

இந்த ” டால்  ரைசினா " உணவு குடியரசு தலைவர் மளிகையின் செஃப் ஆன மெச்சின்ரா கஸ்தூரியால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.Also see... விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாதிக்குமா?

Also see...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...