Mother’s Day 2019: அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவிற்கு இந்த உணவுகளைச் சமைத்து அசத்துங்கள்..!

உங்களுக்காகப் பார்த்து பார்த்து சமைக்கும் அம்மாவுக்கு உங்கள் கைகளால் சமைத்து அசத்துங்கள்.

news18
Updated: May 11, 2019, 4:53 PM IST
Mother’s Day 2019: அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவிற்கு இந்த உணவுகளைச் சமைத்து அசத்துங்கள்..!
அன்னையர் தின ஸ்பெஷல்
news18
Updated: May 11, 2019, 4:53 PM IST
உங்களுக்காகப் பார்த்து பார்த்து சமைத்துக் கொடுக்கும் உங்கள் அம்மாவுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளியுங்கள். அவரை அமர வைத்துவிட்டு உங்கள் கைகளால் சமைத்து அசத்துங்கள்.
கடாய் சிக்கன்

தேவையான பொருட்கள் :


சிக்கன் - 1/2 கிலோ
நல்லெண்ணெய் - 1 tsp
வெண்ணெய் - 1 tsp

Loading...

பிரியாணி இலை - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
தக்காளி - 1
மஞ்சள் - 1/4 tsp
மிளகாய் பொடி - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு



தாளிக்க

எண்ணெய் - 1 tsp
பெரிய வெங்காயம் - 1/2 கப்
குடை மிளகாய் - 1/2 கப்

கடாய் மசாலா தயாரிக்க

தனியா - 2 tsp
சீரகம் - 1 tsp
மிளகு - 1 tsp
ஸ்டார் சோம்பு - 1
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பட்டை - 1
காஷ்மீர் மிளகாய் - 6
அரைக்க
தேங்காய் - 1/4 கப்
முந்திரி - 10

செய்முறை :

கடாய் மசாலா பொடி தயாரிக்கப் பாத்திரத்தில் எண்ணெய் இல்லாமல் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

அதைக் காற்றாட விட்டு மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இதற்கு மண் சட்டிப் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அதில் பட்டர் சேர்த்து பெரிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயைக் கொட்டி வதக்கிக்கொள்ளுங்கள். அதை தனியாகத் தட்டில் கொட்டிக்கொள்ளுங்கள்.

தற்போது அதே மண் பானையில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் கடாய் மசாலா பொடியைச் சேர்க்கவும். அதோடு மஞ்சள், மிளகாய் பொடி சேர்த்துச் சிறு தீயில் கிளறவும்.

வதங்கியதும், தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஸியில் மையாக அரைத்து அதில் ஊற்றவும்.

தற்போது அதை நன்குக் கிளறியதும் சிக்கன் துண்டுகளைச் சேர்த்துப் பிறட்டவும்.

தற்போது ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறிக் கொதிக்கவிடவும்.

கொதிநிலை வரும்போது வதக்கி வைத்துள்ள வெங்காயம் , குடைமிளகாயைச் சேர்க்கவும்.

2 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும். இறுதியாகக் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி குழம்பில் தூவிவிடவும். சுவையான கடாய் சிக்கன் தயார்.

கோக்கனட் கேக்

தேவையான பொருட்கள்

முட்டை - 4
சர்க்கரை - 1 1/2 கப்
வெண்ணெய் - 3 1/2
தேங்காய் பால் - 1.6 கப்
மைதா - 1 1/2 கப்
பால் - 1 கப்
பேக்கிங் சோடா - 1
கண்டன்ஸ்டு மில்க் - 1 3/4 கப்
துருவிய தேங்காய் - 3/4 கப்



செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, உருக்கிய வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு சேர்த்து நன்குக் கிளறவும். அதோடு தேங்காய் பால், மைதா மாவு, பால் சேர்த்து நன்குக் கலக்கவும்.

அடுத்ததாக முட்டை வெள்ளையை நன்கு அடித்துக் கொள்ளவும். அதையும் அந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக பேக்கிங் சோடாமாவையும் சேர்த்துக் கொள்ளவும்.

அதை தற்போது ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அந்த மாவுக் கலவையைக் கொட்டி இட்லி குக்கரில் 30 நிமிடங்கள் வேக விடவும். வெந்துவிட்டதா என அவ்வப்போது பல் குத்தும் குச்சியால் குத்திப்பார்க்கவும்.

வேகும் சமயத்தில் கண்டன்ஸ் மில்க்குடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
கேக் வெந்ததும் அதை வெளியே எடுத்துத் தட்டில் மாற்றிக்கொள்ளுங்கள்.

அதன் மேல் கண்டன்ஸ் மில்க் கலவையை முற்றிலுமாக மேற்பரப்பில் ஊற்றவும்.

அதன்மேல் துருவிய தேங்காயை தூவி விடவும். சுவையான கோக்கனட் கேக் தயார்.
First published: May 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...