மோடியின் பதவி ஏற்பு விழாவில் பரிமாற உள்ள ’தால் ரைசினா’: வீட்டிலும் சமைக்கலாம்!

அது அப்படி என்ன சுவை மிகுந்தது என ஒரு கைப் பார்த்துவிடலாம்.!

மோடியின் பதவி ஏற்பு விழாவில் பரிமாற உள்ள ’தால் ரைசினா’: வீட்டிலும் சமைக்கலாம்!
தால் ரைசினா
  • News18
  • Last Updated: May 30, 2019, 6:20 PM IST
  • Share this:
குடியரசுத்தலைவர் மாளிகையில் பரிமாறப்படும் தால் ரைசினா இன்று பிரதமராக மோடியின் பதவியேற்பு விழாவிலும் முக்கிய உணவாக வழங்கப்படவுள்ளது. சைவம் , அசைவ உணவுகள் வகை வகையாக வரிசைக் கட்டினாலும் மெனுவில் இந்த தால் ரைசினாவிற்குத்தான் முக்கிய வரவேற்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் நீங்களும் சமைத்து சாப்பிடலாம். அது அப்படி என்ன சுவை மிகுந்தது என ஒரு கைப் பார்த்துவிடலாம்.!



 


தேவையான பொருட்கள் 

தோல் உரிக்காத உளுத்தம் பருப்பு - 1/2 கப்
எண்ணெய் - 2 tspவெண்ணெய் - 1 tsp
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - 1/2 tsp
தக்காளி பேஸ்ட் - 1 1/2 tsp
சீரகம் - 1 /2 tsp
புளி
மஞ்சள் - 1/2 tsp
தனியா தூள் - 1 tsp
சீரகத் தூள் - 1/2 tsp
கரம் மசாலா - 1/2 tsp
பச்சை மிளகாய் - 1
கசூரி மேத்தி - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
மில்க் கிரீம் - 2 tsp அல்லது பால் - கால் கப்

செய்முறை:

உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் குக்கரில் போட்டு அதோடு முழு பிரிஞ்சு இலை ஒன்று சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்.

கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விட்டு காய விடவும்.

காய்ந்ததும் சீரகம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

தக்காளியை அரைத்து ஊற்றவும். தக்காளி நன்கு வதங்கியதும் தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

பூண்டு பற்களை பொடியாக நறுக்கிப் போடவும். அதோடு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் மஞ்சள், தனியா, கரம் மசாலா, சீரகத் தூள் சேர்க்கவும். அதோடு பச்சை மிளகாய் சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.

இவற்றை நன்கு கலந்து வதக்கிய பின் வேக வைத்துள்ள உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.

ஒரு கப் நீர் சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் இறுதியாக கசூரி மேத்தி இலைகள் மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.

பின் மில்க் கிரீம் அல்லது பால் சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

சுவையான தால் ரைசினா ரெடி. இதை சப்பாத்தி, நானிற்கு தொட்டுக்கொள்ளலாம் அல்லது வெள்ளை சோறுக்கும் பிசைந்து உண்ணலாம்.
First published: May 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்