கர்நாடகாவிலும் ரோபோ ரெஸ்ட்ராண்ட்: குழந்தைகளின் செஃல்பி பிசியிலும் வேலை செய்யும் ரோபோ

இதற்காக 5.5 லட்சம் செலவு செய்துள்ளார் அதன் நிறுவனர்.

news18
Updated: May 13, 2019, 5:36 PM IST
கர்நாடகாவிலும் ரோபோ ரெஸ்ட்ராண்ட்: குழந்தைகளின் செஃல்பி பிசியிலும் வேலை செய்யும் ரோபோ
கர்நாடகா ரோபோ ரெஸ்டாரண்ட்
news18
Updated: May 13, 2019, 5:36 PM IST
இந்தியாவின் முதல் ரோபோ ரெஸ்டாரண்ட் சென்னை போரூரில்தான் திறக்கப்பட்டது. அந்த ரெஸ்டாரண்ட் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள வினோபா நகரில் உபஹரா தர்ஷினி என்கிற பெயரில் மற்றொரு புதிய ரோபோ ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்குப் பதிலாக இந்த ரோபோக்கள்தான் அங்கு வரும் உணவுப் பிரியர்களுக்கு உணவைப் பரிமாறுகிறது. ரோபோக்கள் தனக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டளைக்கு ஏற்ப செயல்படுகிறது. அதுவும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவைச் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு எடுத்துச் சென்று பரிமாறுவது குழந்தைகளை மட்டுமன்றி பெரியவர்களையும் பிரமிக்க வைக்கிறது.
இதன் ஆற்றலைக் கண்டு இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் செல்ஃபி எடுத்துச் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.

இந்த ரெஸ்டாரண்டின் நிறுவனரான ராஜேந்திரன் ஹோட்டல் துறையில் 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த ரெஸ்டாரண்டை உருவாக்கியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ”சீனாவில் சில உணவகங்கள் ரோபோக்களை பரிமாறப் பயன்படுத்துகின்றனர். அதேபோல் சென்னையிலும் இந்த ரோபோடிக் தீமில் ஒரு ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டுள்ளது. அது மக்களிடமும் வெகுவாகக் கவரப்பட்டதை அறிந்தோம். இவற்றைப் பார்த்துதான் எனக்கும் இந்த யோசனைத் தோன்றியது. இதற்கான ரோபோக்களை சீனாவிலும் மற்ற உபகரணங்களை விஜயவாடாவில்தான் வாங்கினேன்” எனக் கூறியுள்ளார்.இந்த ரோபோக்கள் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் வாடிக்கையாளர்களை வரவேற்கிறது. வரவேற்றதும் தண்ணீர் அருந்துங்கள் என அக்கறையுடன் பேசுகிறது. இதற்காக 5.5 லட்சம் செலவு செய்துள்ளதாக அதன் நிறுவனர் ராஜேந்திரன் டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க...

14,000 அடி உயரத்தில் குளு குளு ஐஸ் கஃபே... பனிக்கட்டிகள் சூழ சூடாக டீ அருந்தலாம்..!

உருளைக் கிழங்கு தோற்றத்தில் லக்ஸுரியான ஹோட்டல் : ஒரு இரவு தங்க ரூ.18 ஆயிரம்
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...