குப்பைகளை சேகரித்துக் கொடுத்தால் சாப்பாடு இலவசம் : இந்தியாவின் முதல் 'Garbage Cafe’!

ஒரு கிலோ பிளாஸ்டிக் சேகரித்தால் முழு மீல்ஸ், 500 கிராம் என்றால் காலை உணவு என்றும் அளிக்கவுள்ளது.

news18
Updated: July 24, 2019, 7:07 PM IST
குப்பைகளை சேகரித்துக் கொடுத்தால் சாப்பாடு இலவசம் : இந்தியாவின் முதல் 'Garbage Cafe’!
உணவு
news18
Updated: July 24, 2019, 7:07 PM IST
பிளாஸ்டிக்கை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் நம்பிக்கையை அளித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடிந்த அளவிலான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மண்ணில் போடுவதைக் காட்டிலும் அதை சேகரித்து கொடுப்போருக்கு இலவசமாக ஒரு மீல்ஸ் இலவசம் என்று அறிவித்திருக்கிறது சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி. இதற்காக குப்பை கஃபே ( Garbage Cafe) என்று ஒரு ஹோட்டல் திறக்கவுள்ளது.

அதன்படி ஒரு கிலோ பிளாஸ்டிக் சேகரித்தால் முழு மீல்ஸ், 500 கிராம் என்றால் காலை உணவு என்றும் அளிக்கவுள்ளது.

இந்த கஃபே, நகரத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் திறக்கப்படவுள்ளது. இந்த குப்பை கஃபே திட்டத்திற்காக ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு மட்டுமன்றி பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துகொண்டு வரும் வீடில்லாதோருக்கு கூரை அமைத்து தங்குமிடமும் வழங்கவுள்ளது.

இந்த திட்டம் பிளாஸ்டிக் ஒழிப்பு மட்டுமன்றி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழும் நடத்தவிருப்பதாக சத்தீஸ்கர் மாநகராட்சியின் மேயர் அஜய் கூறியுள்ளார். ”துப்புரவுப் பிரச்சாரத்தில் சத்தீஸ்கரின் அம்பிகாபூர் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரும் நகராட்சியாகும். ஏற்கனவே இங்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது” என்று அஜய் கூறியுள்ளார்.

இப்படி நகரம் தூய்மையாவது, பிளாஸ்டிக் ஒழிப்பு , பசியால் வாடுவோருக்கு உணவு, தங்குமிடம் என இந்த திட்டம் நாட்டுக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் இருப்பதால் மக்கள் இந்த திட்டத்தை பாராட்டி வருகின்றனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...