பழைய சோறு இருந்தால் இந்த சமையல் மந்திரத்தை பயன்படுத்துங்கள்: பிரியாணியே தோத்துபோகும்!

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு சேர்த்துக்கொள்ளவும். பொன்னிறமாக மாறியதும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.

பழைய சோறு இருந்தால் இந்த சமையல் மந்திரத்தை பயன்படுத்துங்கள்: பிரியாணியே தோத்துபோகும்!
பழைய சோறு
  • News18
  • Last Updated: July 10, 2019, 5:26 PM IST
  • Share this:
பழைய சோறு என்று பெயர் இருந்தாலும் அதன் சுவையும், மணமும் ருசிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதை உண்ட பிறகு கிடைக்கும் திருப்தி பிரியாணி சாப்பிட்டல் கூட கிடைக்காது. இறுதியாக வரும் ஏப்பமே அதற்கு சாட்சி. அப்படிப்பட்ட பழைய சோற்றில் இன்னும் கொஞ்சம் சுவைக் கூட்ட முயற்சி செய்தால் தினம் தினம் விருந்துதான்..!

தேவையான பொருட்கள்

பழைய சோறு - 3 கப்


தயிர் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - அரை மூடி
வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 3
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவுசெய்முறை

பழைய சோறு தண்ணீரை இறுத்துவிட்டு கைகளால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

அதோடு தயிர், எலுமிச்சை சாறு , தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பிசையவும்.

தற்போது சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு சேர்த்துக்கொள்ளவும். பொன்னிறமாக மாறியதும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.

தற்போது தாளித்த பருப்பை கிளறி வைத்துள்ள பழைய சோற்றில் கொட்டிக் கிளறவும். தேவைப்பட்டால் கொத்தமல்லி தழை தூவலாம்.

சுவையான பழைய சோறு பிரியாணி தயார். தொட்டுக்கொள்ள காரசாரமாக எது இருந்தாலும் பொருத்தமே.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்