ருசியான மணமணக்கும் மாம்பழ மோர்குழம்பு செய்வது எப்படி?

சீசன் பழங்களை உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ருசியான மணமணக்கும் மாம்பழ மோர்குழம்பு செய்வது எப்படி?
மாம்பழத்தில் மோர்க்குழம்பு!
  • News18
  • Last Updated: May 20, 2019, 12:25 PM IST
  • Share this:
கோடைக்காலம் என்றாலே மாம்பழம்தான். அத்தகைய மாம்பழத்தில் ருசியான மோர் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இனிப்பான மாம்பழங்கள் – 2


புளித்த மோர் – 2 கப்

அரிசி – ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று

காய்ந்த மிளகாய் – 2

தேங்காய் துருவல் – ஒரு கப்

தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

மாம்பழம்


செய்முறை:

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் புளித்த மோரை மிக்சியிலோ அல்லது கரண்டியிலோ நன்றாக  கலக்கி எடுத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் ஆகிவற்றையும் எடுத்து மையாக அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்த விழுதை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைத்த மாம்பழங்களுடன் கலக்க வேண்டும். தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும்.

நன்றாக மோர் குழம்பு கொதித்த பின்னர், தாளிக்கும் கரண்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து  இறக்க வேண்டும். இப்போது ருசியான மோர் குழம்பு ரெடி.

Also see... கசப்பிலும் இருக்குது சுவை...! டேஸ்டான பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

ஸ்னாக்ஸ் டைம் ரெசிபி: ஆரோக்கியமான பச்சை பயறு சாலட்!

Also see...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்