சுவையான முருங்கைக்கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி?

கர்பிணிகளுக்கு மிகவும் தேவையான இரும்புசத்து இந்த முருங்கைக்கீரையில் கிடைகிறது.

சுவையான முருங்கைக்கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி?
சுவையான முருங்கைக்கீரை முட்டை பொரியல்
  • News18
  • Last Updated: May 29, 2019, 1:05 PM IST
  • Share this:
முருங்கைக்கீரை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் அதோடு உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும். முட்டையும் நம் உடலுக்கு தேவையான புரதசத்துகளையும் வைட்டமின் டி -யையும் தருகிறது. இந்த முருங்கை கீரை மற்றும் முட்டையின் மூலமாக ருசியான பொரியல் செய்யலாம். அதை எப்படி செய்வது என்பதை பார்க்காலம்.

தேவையன பொருள்கள்:

முருங்கைக்கீரை - 3 கப்


முட்டை- 3

பச்சை மிளகாய் - 2

சீரகம் ஒரு ஸ்பூன்சின்ன வெங்காயம் - 10

உப்பு  தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு (நல்லெண்ணெயாக இருந்தால் நல்லது) .

முருங்கைக்கீரை


செய்முறை: 

முருங்கைக்கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.  பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும். பச்சை மிளகாய் பிடிக்காதவர்கள் காய்ந்த மிளகாயையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பின்னர் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

இப்போது கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சீரகத்தை போட வேண்டும். அது பொரிந்தவுடன் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்நிறமாக மாறியதும், அத்துடன் கீரையை சேர்க்க வேண்டும். முருங்கைக்கீரை நன்றாக வெந்தவுடன் முட்டையை  சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

இப்போது கீரையுடன் முட்டை நன்றாக கலந்து தேங்காய் துறுவல் போட்டதுபோல இருக்கும். அத்துடன் தேவையான உப்பு சேர்த்து சூடாக பரிமாறலாம். இது சாம்பார் சாதம், நெய் சாதம் போன்றவற்றிற்கு சூப்பரான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

முட்டை


டிப்ஸ்: கீரை வகைகளை சமைக்கும் போது மூடி போட்டு வைக்காமல், திறந்தே சமைத்தால் அதன் பச்சைநிறம் மாறமால் இருக்கும்.

Also see... மாங்காய் சட்னி செய்வது எப்படி? 

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! 

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!

Also see.... 
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்