கொளுத்தும் வெயிலுக்கு ஜில் ஸ்னாக்ஸ்...! குளிர்ச்சி தரும் காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்!

கோடைக்காலத்திற்கு தேவையான சாலட்

Vaijayanthi S | news18
Updated: May 8, 2019, 12:51 PM IST
கொளுத்தும் வெயிலுக்கு ஜில் ஸ்னாக்ஸ்...! குளிர்ச்சி தரும் காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்!
மாதிரிப்படம்
Vaijayanthi S | news18
Updated: May 8, 2019, 12:51 PM IST
நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு சாலட்டை சாப்பிடலாம். கோடைக் காலத்திற்கு ஏற்ற குளிச்சியான காய்கறி மற்றும் ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ், வெள்ளரிக்காய், தக்காளி, பெரிய வெங்காயம், ஆப்பிள், கொய்யா, திராட்சை பழம், ஆரஞ்சு பழம், மாதுளம், மிளகு, தேன், எலுமிச்சை ஆகிவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.


செய்முறை :

தக்காளியை சிறுசிறு துண்டுகலாக வெட்டிக்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய், கொய்யா, திராட்சை பழம், ஆரஞ்சு பழம் மற்றும் ஆப்பிளை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அத்துடன் முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மாதுளம் பழத்திலிருந்து முத்துக்களை உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், பழங்களை ஒன்றாக போட்டு அதனுடன் மிளகு தூள், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது குளிர்ச்சி தரும் காய்கறி-ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் ரெடி.

Loading...

இந்த சாலட் உண்பதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். உடலை குளிர்ச்சிப்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

Also see... நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள் என்னென்ன? 

கேரட் சாதம் இப்படி செய்தால் வீடே மணக்கும்!  

மதிய உணவை அசத்தலாக்கும் பிசிபெல்லா பாத்! 

Also see... ருசியோ ருசி - சுவையான கருணைக்கிழங்கு கட்லெட்
First published: May 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...