கசப்பிலும் இருக்குது சுவை...! டேஸ்டான பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களில் ஊறுகாய் வைப்பதன் மூலம் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது. சுவையும் மாறாது.

Vaijayanthi S | news18
Updated: May 20, 2019, 12:07 PM IST
கசப்பிலும் இருக்குது சுவை...! டேஸ்டான பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
பாகற்காய் ஊறுகாய்
Vaijayanthi S | news18
Updated: May 20, 2019, 12:07 PM IST
நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால் பாகற்காயில் பலவிதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று பாகற்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 200 கிராம்


நல்லெண்ணெய் - 100 கிராம்

மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப

வெந்தைய தூள் - 2 டீஸ்பூன்

Loading...

பெருங்காய் தூள் -1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கல் உப்பு - சுவைக்கேற்ப.

வினிகர் - 150 மில்லி அல்லது தேவையான அளவு எலும்மிச்சை பழச்சாறு

செய்முறை: 

பாகற்காயை நன்றாக கழுவி துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . அதன்பின்னர் சிறிது சிறிதாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்க வேண்டும்.

இந்த கலவையை சரியாக  ஒரு நாள் வரை மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது. மறுநாள், வாணலியில் இரும்பு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விட வேண்டும்.

அத்துடன் பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும். மிளகாய்த்தூள் போட்ட மறு நிமிடமே உப்பில் ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

பாகற்காய்


பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை அல்லது எலும்பிச்சை பழத்தின் சாற்றை சேர்க்க வேண்டும். இது நன்றாக வற்றும் வரை கிளறிவிட வேண்டும். அதன்பின்னர் எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஊறுகாய் பதத்திற்கு வந்ததும், அதனை ஆறவைத்து  கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும்.  இப்போது சுவையான சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.

குறிப்பு:

கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களில் ஊறுகாய் வைப்பதன் மூலம் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது. சுவையும் மாறாது.

Also see...

கொளுத்தும் வெயிலுக்கு ஜில் ஸ்னாக்ஸ்...! குளிர்ச்சி தரும் காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்! 

கேரட் தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Also see...




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...