மாலை வேளையைச் சுவையாக்கும் பொட்டேடோ நக்கெட்ஸ்!

பொறியல், வறுவல் என இல்லாமல் வித்யாசமாக இந்த சுவையில் செய்து கொடுங்கள். 

news18
Updated: May 13, 2019, 8:21 PM IST
மாலை வேளையைச் சுவையாக்கும் பொட்டேடோ நக்கெட்ஸ்!
பொட்டேடோ நக்கெட்ஸ்
news18
Updated: May 13, 2019, 8:21 PM IST
உருளைக் கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக் கூடிய காய்கறி. இதை பொறியல் , வறுவல் என இல்லாமல் வித்யாசமாக இந்த சுவையில் செய்து கொடுங்கள். 

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3


வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
முழு பூண்டு - 2

Loading...

உடைத்த காய்ந்த மிளகாய் - 1 tsp
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு - 1 tsp
சோள மாவு - 1 ஸ்பூன்
சீவிய சீஸ் - 1 கப்
பிரெட் - 8
உப்பு - தேவையான அளவுசெய்முறை :

உருளைக் கிழங்கை வேக வைத்துக்கொள்ளவும்.
வெந்ததும் அவற்றை மைய மசித்து அதோடு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சீராகக் கலந்ததும் 30 நிமிடங்கள் ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.

அதன் இடைவேளையில் பிரட் துண்டுகளைத் தோசைக்கல்லில் சூடுபடுத்திக் கொண்டு மிக்ஸியில் மொறமொறப்பாக அரைத்துக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் அரைத்த பின்பும் கடாயில் லேசாக வறுத்தால் மொறுமொறுவென வரும். இதை பிரட் க்ரம்ஸ் என அழைப்பார்கள்.

அடுத்ததாக சோளமாவுவை அரை கிளாஸ் தண்ணீரில் கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின் வெளியே எடுத்துக் கொண்டு மாவு ஒட்டாமல் இருக்கக் கயில் எண்ணெய் தடவிக் கொண்டு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

தற்போது அவற்றைச் சோளமாவுத் தண்ணீரில் முக்கி எடுத்துப் பின் பிரட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
சுவையான பொட்டேடோ நக்கெட்ஸ் தயார்.

இதற்கு மையோனைஸில் ஒரு ஸ்பூன் டொமேடோ கெட்ச் அப் கலந்து தொட்டுச் சாப்பிட்டால் சுவையில் மெய் மறப்பீர்கள்.

இதையும் படிக்க...

ஐஸ் கட்டிகளை அப்படியே உண்பது நல்லதா?

நிவேதா பெத்துராஜ் அழகிற்குக் காரணம் இதுதான்... இன்ஸ்டாகிராமில் உடைத்த ரகசியம்...!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...