ஸ்னாக்ஸ் டைம் ரெசிபி: ஆரோக்கியமான பச்சை பயறு சாலட்!

தானிய வகைகளை வேக வைத்து உண்பது ஸ்னாக்ஸ் டைமை ஆரோக்கியமாக மாற்றும்.

news18
Updated: May 15, 2019, 8:15 PM IST
ஸ்னாக்ஸ் டைம் ரெசிபி: ஆரோக்கியமான பச்சை பயறு சாலட்!
பச்சை பயிறு சாலட்
news18
Updated: May 15, 2019, 8:15 PM IST
தானிய வகைகளின் பயன்கள் சொல்லில் அடங்காதவை. இதுபோன்ற தானிய வகைகளை வேக வைத்து உண்பது ஸ்னாக்ஸ் டைமை ஆரோக்கியமாக மாற்றும்.

தேவையான பொருட்கள்:

பச்சைப் பயிறு - ஒரு கப்
உருளைக் கிழங்கு - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய்த் தூள் - 1/4 ஸ்பூன்
சாட் மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ஒரு ஸ்லைஸ் (புளிப்பு சுவைக்கு ஏற்ப )
கொத்தமல்லித் தழை - கையளவுசெய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊற வைத்துவிடுங்கள்.
உருளைக் கிழங்கை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

பச்சைப் பயிரை குக்கரில் வேக வைத்துக்கொள்ளுங்கள்.
வெந்ததும் பச்சைப் பயிரை பவுளில் போட்டு அதோடு வேக வைத்த உருளைக் கிழங்கைப் பொடியாக நறுக்கி போடவும்.

அதோடு பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித் தழை, மிளகாய் பொடி, சாட் மசாலா, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்குக் கலந்துகொள்ளுங்கள்.

எலுமிச்சை சாற்றைத் தேவையான அளவு பிழிந்து அதையும் நன்குக் கலந்துகொள்ளுங்கள்.

சுவையான பச்சை பயிறு சாலட் ரெடி.

இதையும் படிக்க :

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: நொடியில் அசத்தலாம் உருளைக் கிழங்கு சாதம்

மாலை வேளையைச் சுவையாக்கும் பொட்டேடோ நக்கெட்ஸ்!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...