புற்றுநோய் கிருமிகளை எதிர்க்கும் பப்பாளி டீ எவ்வாறு தயாரிப்பது ?

இதனால் அல்சர், செரிமாணமின்மை , இரத்தத்தில் சிவப்பணுக்களின் குறைபாடு போன்ற பிரச்னைகளையும் சரி செய்ய உதவும்.

news18-tamil
Updated: August 2, 2019, 10:54 PM IST
புற்றுநோய் கிருமிகளை எதிர்க்கும் பப்பாளி டீ எவ்வாறு தயாரிப்பது ?
பப்பாளி டீ
news18-tamil
Updated: August 2, 2019, 10:54 PM IST
பப்பாளி டீ குடிப்பதால் புற்றுநோய்க் கிருமிகளின் உருவாக்கத்தை ஆரம்பத்திலேயே அழிக்க முடியும் என Journal of Ethnopharmacology என்னும் தளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களும் இதை உறுதி செய்கின்றனர். அதுமட்டுமன்றி இதனால் அல்சர், செரிமானமின்மை , இரத்தத்தில் சிவப்பணுக்களின் குறைபாடு போன்ற பிரச்னைகளையும் சரி செய்ய உதவும்.

தேவையான பொருட்கள்

பப்பாளி இலை - ஐந்து

தண்ணீர் - 2 கப்

தேன் - 1 ஸ்பூன்செய்முறை :

பப்பாளி இலைகளை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும்போது நறுக்கிய பப்பாளி இலைகளை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

இலைகள் சுருங்கத் துவங்கியதும் ஸ்பூனால் கிளறிவிட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து இரண்டு நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொஞ்சம் இறுகியதும் அடுப்பை அணைத்துவிடவும்.

தற்போது தண்ணீரில் உள்ள இலைகளை வடிகட்டிக்கொள்ளவும். தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் ஆரோக்கியமான பப்பாளி டீ தயார்.
First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...