முட்டை பணியாரம் செய்வது எப்படி?

முட்டையில் பணியாரம் செய்து கொடுத்தால் குழந்தைகள் காலை உணவை தவிர்க்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

Web Desk | news18
Updated: August 12, 2019, 2:21 PM IST
முட்டை பணியாரம் செய்வது எப்படி?
முட்டை பணியாரம்
Web Desk | news18
Updated: August 12, 2019, 2:21 PM IST
காலை நேரம் டிபனுக்கு சிறந்த உணவு முட்டை. அந்த முட்டையில் வழக்கமாக செய்யும் ஆம்லெட், பொரியல் என்று ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமாக பணியாரம் செய்தால் எப்படி இருக்கும்.

சுவையான முட்டை பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:


இட்லி மாவு - ஒரு கப்

முட்டை - 2

சின்ன வெங்காயம் - 1

Loading...

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

கடுகு - தாளிக்க

உளுத்தம்பருப்பு - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 ஸ்பூன்

முட்டை பணியாரம்


செய்முறை:

முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். அடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு , நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி மாவுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கலவைக்கு ஏற்ப தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க... கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு செய்வது எப்படி?

அதன் பின்னர் குழிப்பணியாரக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் முட்டை கலந்த மாவுக்கலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்ற வேண்டும். மாவு வெந்ததும் பிரட்டி எடுத்தால் சுவையான முட்டைப் பணியாரம் தயார்.

இதையும் படிக்க... மாங்காய் வற்றல் பத்தியக் குழம்பு செய்வது எப்படி?

இதனை செய்து கொடுத்தால் குழந்தைகள் காலை உணவை தவிர்க்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க... உணவில் கலைத் திறமையைக் காட்டும் பெண்: குழந்தைகளைச் சாப்பிட வைக்க இப்படியொரு ட்ரிக்ஸ்..!
First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...