மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் தேங்காய் பர்பி

இது வெறும் ஸ்னாக்ஸ் அல்ல..!

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் தேங்காய் பர்பி
தேங்காய் பர்பி
  • News18
  • Last Updated: June 11, 2019, 8:22 PM IST
  • Share this:
தேங்காய் பர்பி ஆரோக்கியமான ஸ்னாக்ஸ். இரும்புச் சத்து, எடைக் குறைவு, உடலுக்குக் குளிர்ச்சி , வயிற்றுப் புண், அஜீரணக் கோளாறு , நோய் எதிர்ப்புச் சக்தி என இதன் நன்மைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். உங்களுக்குக் கடுப்பான உணர்வு, ஏதேனும் கொறிக்க வேண்டும் என்று தோன்றினால் இந்த தேங்காய் பர்பி சுவையுங்கள். அதன் சுவையில் மெய் மறப்பீர்கள்.


தேவையான பொருட்கள் 
முழு தேங்காய் - 1

கருப்பட்டி வெல்லம் - 150 கிராம்
நெய் -  1 Tsp

ஏலக்காய் - 2

முந்திரி, பாதாம் - 2 Tspசெய்முறை 


ஏலக்காய் முந்திரிகளைப் பொடியாக்கிக் கொள்ளவும். தேங்காயைச் சீவிக்கொள்ளவும்.


தேங்காயைக் கடாயில் ஐந்து நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.


மற்றொரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை உருக்கிக்கொள்ளவும்.


நன்கு உருகியதும் சீவி வைத்துள்ள தேங்காயை அதில் கொட்டிப் பிறட்டவும்.


அடுத்ததாக நெய், ஏலக்காய், முந்திரி பொடி சேர்த்துக் கலக்கவும். கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.


அதை அப்படியே சூட்டோடு சூடாக அகலமான பாத்திரத்தில் கொட்டி சமன் செய்து கத்தியால் சதுரமாக வெட்டவும்.


நன்கு ஆறியதும் எடுத்துச் சுவைக்கலாம். சிறுவர்களும் ரசித்து ருசிப்பார்கள். பின் சாக்குலேட்டுகளை மறந்து தேங்காய் பர்பிக்கு அடிமையாகிவிடுவார்கள்.

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்