சுவைக்கத் தூண்டும் வாழைப்பழம் கேக்: குக்கரிலேயே செய்யலாம்!

வீட்டில் சமைக்கப் பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

news18
Updated: June 20, 2019, 7:32 PM IST
சுவைக்கத் தூண்டும் வாழைப்பழம் கேக்: குக்கரிலேயே செய்யலாம்!
வாழைப்பழம் கேக்
news18
Updated: June 20, 2019, 7:32 PM IST
கடையில் கேக் வாங்கி ருசிப்பதைவிட, நம் கையால் பார்த்து பார்த்து செய்து சாப்பிடும் கேக்கிற்கு இன்னும் சுவை அதிகம். அதை நீங்களும் அனுபவிக்க இந்த ரெசியை முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பெரிய வாழைப்பழம் - 3
மைதா - 3 கப்
உப்பு - 1/2 tsp
பேக்கிங் சோட - 1 tsp
ஏலக்காய் பொடி - 1/2 tsp
உப்பு இல்லாத் வெண்ணெய் - 3/4 கப்
சர்க்கரை - 1 கப்
நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 2 tsp
முட்டை - 3
பட்டர் மில்க் - 1 1/2 tsp
நட்ஸ் வகைகள் - அரை கப்



செய்முறை:

வாழைப்பழத்தை நறுக்கி மசித்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக பாத்திரத்தில் மைதாவைக் கொட்டி அதில் உப்பு , பேக்கிங் சோடா, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கலக்கவும். அதை தனியாக வைத்துக்கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய்யை நன்கு மசித்துக் கொள்ளவும். அதோடு சர்க்கரை மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

தற்போது கலந்து வைத்துள்ள மைதாவை வெண்ணெயுடன் கொட்டி கலந்துகொள்ளவும். அதில் வெண்ணிலா எசன்ஸ், மூன்று முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கவும். அதில் பட்டர் மில்கையும் சேர்த்துக்கொள்ளவும்.

தண்ணீர் பதத்தில் இருந்தால் மைதாவை கூடுதலாக தேவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம். கெட்டிப் பதத்தில் கிளறியதும் நட்ஸை உடைத்து அதில் தூவி நன்றாகக் கலக்கவும்.

தற்போது குறைந்த தீயில் குக்கரில் ஒரு கப் உப்பு கொட்டி அதன்மேல் பாத்திர ஸ்டாண்ட் வையுங்கள். 15 நிமிடங்கள் காய்ந்ததும் கேக் கலவையை சிறு பாத்திரத்தில் வெண்ணெய் தடவிக் கொட்டவும். அந்தப் பாத்திரம் சுற்றிலும் குக்கரைத் தொடாதவாறு இருக்க வேண்டும். தற்போது குக்கரை மூடிவிடவும். சிறு தீயிலேயே 45 நிமிடங்கள் வைக்கவும்.

45 நிமிடத்திற்குப் பின் குக்கரைத் திறந்து பாருங்கள் மணமணக்கும் கேக் தயார்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...