சர்க்கரை நோயாளிகளுக்குப் பலன் தரும் சுவையான நெல்லிக்காய் தொக்கு!

மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக தொக்கு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

news18
Updated: June 19, 2019, 11:23 AM IST
சர்க்கரை நோயாளிகளுக்குப் பலன் தரும் சுவையான நெல்லிக்காய் தொக்கு!
நெல்லிக்காய் தொக்கு
news18
Updated: June 19, 2019, 11:23 AM IST
நெல்லிக்காயில் பலவிதமான மருத்து குணங்கள் இருக்கின்றன. இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக தொக்கு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 20
எண்ணெய் - 4 tsp
கடுகு - 1 tsp
வெந்தையம் - 1/4 tsp
பெருங்காயத் தூள்- 1/2 tsp
மிளகாய்த் தூள் - 5 tsp
உப்பு - 3 tsp
வெல்லம் - 1 tsp



செய்முறை:

நெல்லிக்காய்களைக் கடாயில் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வேகும் வரை கொதிக்க விடவும்.

வெந்ததும் அவற்றைத் தண்ணீரிலிருந்து வடிகட்டி காயவிடவும். சூடு தணிந்ததும் கொட்டைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

அதை ஜாரில் கொட்டி மிக்ஸியில் மைய அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு பொரிந்ததும் வெந்தையம் சேர்க்கவும்.

பின் மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளரவும். பின் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் பேஸ்டை கொட்டி நன்கு கிளறவும்.

தற்போது உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கவும். தொக்கு நன்கு கருஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

சுவையான நெல்லிக்காய் தொக்குத் தயார். இதை அனைத்து உணவுகளுக்கும் ஊறுகாய் போல் தொட்டு சாப்பிடலாம்.
First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...