கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு செய்வது எப்படி?

தோசை, இட்லி, சாதம், பழைய சாதத்திற்கு தொட்டுகொள்ள இந்த விரால் மீன் குழம்பு சூப்பராக இருக்கும்.

Web Desk | news18
Updated: July 12, 2019, 3:00 PM IST
கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு செய்வது எப்படி?
விரால் மின் குழம்பு
Web Desk | news18
Updated: July 12, 2019, 3:00 PM IST
விரால் மீன் பொதுவாக கிராமங்களில்தான் கிடைக்கும். இவை ஃப்ரெஷ் வாட்டர் பிஷ் என்று அழைக்கபடுவது வழக்கம். ஏனென்றால் இந்த வகை மீன்கள் ஆறுகள், குளம் மற்றும் குட்டைகளில்தான் கிடைக்கும். கடலிலும் விரால் மீன்கள் கிடைக்கும். ஆனால் அவை அந்த அளவிற்கு சுவையானதாக இருக்காது என்பார்கள் கிராமத்துவாசிகள்.

தேவையான பொருட்கள்:

விரால் மீன் - 1/4 கிலோ


சின்ன வெங்காயம் - 50 கிராம்

தக்காளி - 2

புளி - சிறிதளவு

Loading...

தேங்காய்ப் பால் - கால் கப்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

பூண்டு - 10 பல்

வறுத்துப் பொடித்த வெந்தயம் -1 டீஸ்பூன்

சீரகம் -  1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

வெந்தயம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு

விரால் மீன்


செய்முறை:

விரால் மீனை எடுத்து நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். ஒருபுறம் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை , கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அத்துடன் புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். புளி நன்றாக ஊறியதும் அதனை தனியாக கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், சீரகம்,  கறிவேப்பிலை போட்டுத் தாளிக்க வேண்டும். அதன் பின்னர் அதில் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்க வேண்டும். அத்துடன் தக்காளி மற்றும் சிறியத் துண்டுகளாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.

ஆற்றில் கிடைக்கும் விரால் மீன்


இந்த கலவை வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீரையும் சேர்க்க வேண்டும். புளியின் பச்சை வாசனை வரை குழம்பை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்த பிறகு விரால் மீன் துண்டுகளை  சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம். இப்போது சுவையான கிராமத்து விரால் மீன் குழம்பு தயார்.

தோசை, இட்லி, சாதம், பழைய சாதத்திற்கு தொட்டுகொள்ள இந்த விரால் மீன் குழம்பு சூப்பராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: பொதுவாக மீன் குழம்பு 2-வது நாள்தான் சுவையாக இருக்கும். மீன் நன்றாக குழம்பில் ஊறி 2-வது நாள் சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். கிராமத்துவாசிகள் பொதுவாக முதல்நாள் மாலையே மீன் குழம்பை வைத்துவிட்டு மறுநாள் காலைதான் சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க... காபி, டீ அடிக்கடி அருந்துவது சரியா? மருத்துவர் கூறுவது  என்ன?





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...