லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: நொடியில் அசத்தலாம் உருளைக் கிழங்கு சாதம்

தற்போது கடாயில் தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புவை போட்டு வதக்கவும்.

news18
Updated: May 14, 2019, 8:49 PM IST
லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: நொடியில் அசத்தலாம் உருளைக் கிழங்கு சாதம்
உருளைக் கிழங்கு சாதம்
news18
Updated: May 14, 2019, 8:49 PM IST
உருளைக் கிழங்கு சாதத்தை இப்படி செய்து பாருங்கள். லஞ்ச் பாக்ஸ் மிச்சமில்லாமல் வந்து சேரும்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3


மசாலா பொடி தயாரிக்க
தனியா - 2 tsp
மிளகாய் - 5

Loading...

கடுகு - 1 tsp
கடலைப் பருப்பு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
வெந்தையம் - 1 tsp
சீரகம் - 1 tsp
மிளகு - 1 tsp
தாளிக்க
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
கடலைப் பருப்பு - 2 tsp
உளுத்தம்பருப்பு - 1 tsp
காய்ந்த மிளகாய் - 2
கொத்தம்மலி கருவேப்பிலை - சிறிதளவுசெய்முறை :

அரிசியை உதிரியாக வேக வைத்து வெப்பம் தணிய ஆற வைக்கவும்.

மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொடி தயாரிக்கத் தேவையானப் பொருட்களை எண்ணெய் இன்றி கடாயில் வறுக்கவும். சூடு குறைந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.

தற்போது கடாயில் தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புவை போட்டு வதக்கவும்.

அடுத்ததாக காய்ந்த மிளகாய், கறிவேப்பிலைச் சேர்க்கவும்.

தற்போது சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கவும்.

சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.

தற்போது அரைத்த மசாலா பொடியைச் சேர்த்து வதக்கவும்.

உருளைக் கிழங்கு வெந்ததும் ஆற வைத்த சாதத்தை போட்டுக் கிளறவும்.

இறுதியாகக் கொத்தமல்லி தழை தூவவும்.

சுவையான உருளைக் கிழங்குச் சாதம் தயார். இதற்கு மொறுமொறு அப்பளம், ஊறுகாய் பொருத்தமாக இருக்கும்.

இதையும் படிக்க :

மதிய உணவை அசத்தலாக்கும் பிசிபெல்லா பாத்!

வீடே மணக்கும் சிக்கன் மசாலா பொடி தயார் செய்வது எப்படி?

உணவு செரிமானம் அடையவில்லையா..இயற்கை வழியில் உடனடி தீர்வுகள் இதோ..!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...