நாவூறும் ருசி : சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம் வெண்டைக்காய் மசாலா!

இந்த வெண்டைக்காய் மசாலா செய்து பாருங்கள். வீட்டில் அனைவரும் அசந்து விடுவார்கள்.

நாவூறும் ருசி : சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம் வெண்டைக்காய் மசாலா!
சப்பாத்திக்கும் தொட்டக்கலாம் வெண்டைக்காய் மசாலா
  • News18
  • Last Updated: May 27, 2019, 4:08 PM IST
  • Share this:
சப்பாத்தி இன்றைய உணவுமுறையின் கட்டாய உணவாக மாறியுள்ளது. அதற்கு என்ன சைட் டிஷ் செய்யலாம் என்பதே பெரும் குழப்பமாக இருக்கும். யோசிக்கவே வேண்டாம். இந்த வெண்டைக்காய் மசாலா செய்து பாருங்கள். வீட்டில் அனைவரும் அசந்து விடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 250 கிராம்


எண்ணெய் - தேவையான அளவு
பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய் - 1
வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 tsp
தக்காளி - 3
மஞ்சள் - 1/4 tsp
மிளகாய் தூள் - 2 tsp
தனியா தூள் - 1 tsp
சீரகத் தூள் - 1 tsp
உப்பு - 1 tsp
தயிர் - அரை கப்
தண்ணீர் - 1 கப்
கரம் மசாலா பொடி - 1/4 tsp
சர்க்கரை - 1/2 tsp
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கசூரி மேத்தி - சிறிதளவுசெய்முறை :

வெண்டைக்காயை சுண்டு விரல் நீளத்திற்கு நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும்.
தக்காளியை மைய மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.

நன்கு கொதிக்கவிட்டு திக் பேஸ்ட் ஆனதும் கொத்தமல்லி தழை மற்றும் கசூரி மேத்தி சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.

சுவையான வெண்டைக்காய் மசாலா ரெடி.
First published: May 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்