மதிய உணவை அசத்தலாக்கும் பிசிபெல்லா பாத்!

இந்த ஸ்டைலில் சமைத்துப் பாருங்கள்... நீங்களே அசந்து போவீர்கள்..!

Sivaranjani E | news18
Updated: May 7, 2019, 9:28 PM IST
மதிய உணவை அசத்தலாக்கும் பிசிபெல்லா பாத்!
பிசிபெலா பாத்
Sivaranjani E | news18
Updated: May 7, 2019, 9:28 PM IST
சாம்பார் சாதம்தானே என்று இதை சுருக்கிவிட முடியாது. சாம்பார் சாதத்தைவிட சற்று கூடுதல் சுவை கொண்ட உணவு. இதை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

அரிசி - 3/4 கப்


துவரம் பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 8
புளி - எலுமிச்சை அளவு

Loading...

வெல்லம் - 1 1/2 Tsp
உப்பு - 1/2 Tsp
நெய் - 1 Tsp
பச்சை பட்டாணி - 1/4 கப்
பீன்ஸ் - 5
குடை மிளகாய் - 1/4 கப்
கேரட் - 1
வேர்கடலை - 1/4 கப்
காய்கறிகள் : உங்களுக்குப் பிடித்த எந்தக் காய் வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தாளிக்க :

நெய் - 1 Tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 Tsp
காய்ந்த மிளகாய் - 1
பிசிபெல்லாபாத் பொடி தயாரிக்க
காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 4
பட்டை - 1 இஞ்ச்
கிராம்பு - 2
சீரகம் - 1 Tsp
உளுத்தம்பருப்பு - 1 Tsp
கடலைப் பருப்பு - 1 Tsp
வெந்தையம் - 1/2 Tsp
தனியா - 1 1/2 Tsp
தேங்காய் துருவல் - 1 Tsp

செய்முறை :

முதலில் பிசிபெல்லா பாத் பொடி செய்து கொள்ள கடாயில் குறிப்பிட்டுள்ள பொருட்களை குறைந்த தீயில் வறுக்கவும். எண்ணெய் இல்லாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
புளியை தண்ணீரில் ஊறவைக்கவும்.

வறுத்து சூடு தணிந்ததும் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக குக்கரில் அரிசி மற்றும் பருப்பு சேர்த்துக்கொள்ளவும். அரிசி அளந்த கப்பில் ஒரு கப் அரிசிக்கு 1 3/3 கப் தண்ணீர் சேர்க்கவும். பருப்பு அளந்த கப்பில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். இரண்டும் மைய வேகுமாறு 5 விசில் வைத்துக்கொள்ளவும்.

மற்றொரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொறிக்கவும். பொறிந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் மற்ற காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றவும். அதோடு பிசிபெல்லாபாத் பொடியையும் சேர்க்கவும். அதோடு வெல்லம் சேர்க்கவும்.

அவை நன்கு கொதி வந்ததும் குக்கரில் மசிந்த அரிசி பருப்பை சேர்த்து நன்கு கலக்கவும். கட்டிகளின்றி கலக்கவும். தற்போது அதை குறைந்த தீயில் 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

தாளிக்க மற்றொரு கடாயில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சாதத்தில் கொட்டி கிளறவும்.

சுவையான பிசிபெலா பாத் தயார். இதற்கு அப்பளம், ஊறுகாய், போன்ற சிம்பிள் சைட்டிஷே பொருத்தமாக இருக்கும்.

இதையும் பார்க்க :  ருசியோ ருசி… நாட்டுக் கோழி கிரேவி


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...