உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொண்டால் செரிமானத்தில் பிரச்னை ஏற்படும் - ஆய்வில் தகவல்

இரப்பை என்பது பசியைத் தூண்டி உணவு உண்ட பின்  செரிமாணித்து உடலுக்குத் தேவையான சத்துகளை பிரித்து அனுப்பும் வேலையைச் செய்கிறது.

news18
Updated: July 2, 2019, 7:01 PM IST
உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொண்டால் செரிமானத்தில் பிரச்னை ஏற்படும் - ஆய்வில் தகவல்
உப்பு
news18
Updated: July 2, 2019, 7:01 PM IST
உணவில் அதிக உப்பு (சோடியம் குளோரைடு) சேர்த்துக் கொண்டால் இரப்பை குடலில் வீக்கம் (Gastrointestinal Bloating) ஏற்படும். இதனால் செரிமானம் பாதிக்கப்படும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரப்பை என்பது பசியைத் தூண்டி உணவு சாப்பிட்ட பின்  செரித்து உடலுக்குத் தேவையான சத்துகளைப் பிரித்து அனுப்பும் வேலையைச் செய்கிறது.

அமெரிக்காவில் உள்ள Johns Hopkins Bloomberg School of Public Health ஆய்வாளர்கள் ஏற்கனவே 1998-1999 -ல் செய்திருந்த ஆராய்ச்சியை எடுத்து மீண்டும் உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளனர்.


இரைப்பை குழாயில் வீக்கம் என்பது அதிகரித்து வரும் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்று ஆராய முற்படும்போது, இதற்கு முன் செய்யப்பட்ட ஆராய்ச்சியை எடுத்து மீண்டும் ஆய்வு செய்ததில் உறுதியானது. இதைத் தவிர்க்க சிறந்த வழி உணவில் உப்பைக் குறைத்துக்கொள்வதுதான். அதுமட்டுமன்றி நார்ச்சத்தை அதிகமாக உட்கொள்வதால் இரப்பையின் வேலை எளிதாகும் என்று கூறுகிறார் நோயல் மியூயெல்லர். இவர் இந்த ஆராய்ச்சியின் மூத்த தலைவர்.

இரைப்பை குழாய் வீங்கி வயிறு உப்புசமாக இருக்கும்போது, அதிகப்படியான வாயு வெளியேறுகிறது. இது நார்சத்தில் இருக்கும் சத்துகளை அழித்துவிடும். இதனால் நார்சத்து உடலுக்குக் கிடைக்காமல் போனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும். எனவே இரைப்பை குழாயின் வீக்கத்தைத் தூண்டும் மூல காரணமான உப்பை (சோடியம் குளோரைடு) அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என்று கூறுகிறது ஆய்வு முடிவு.
Loading...

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...