காஃபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

பரபரப்பான பணி நேரத்தில் சூடாக அருந்து ஒரு கப் காஃபிக்கு ஈடு இணையே இல்லை.

காஃபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
காஃபி அருந்துவதால் என்ன நன்மை ?
  • News18
  • Last Updated: June 10, 2019, 4:04 PM IST
  • Share this:
பரபரப்பான பணி நேரத்தில் சூடாக அருந்தும் ஒரு கப் காஃபிக்கு ஈடு இணையே இல்லை. அதன் வாசனை நம் மூளையைச் சுறுசுறுப்பாக்கி பணியை மீண்டும் தொடங்க புத்துணர்ச்சி தரும். இது வெறும் புத்துணர்ச்சிக்கானது மட்டுமல்ல, இதில் உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை இருக்கின்றன.தசை வலிகளை நீக்கும்:


ஜார்ஜியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காஃபி குடிப்பதால் தசை வலிகள் நீங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாள்பட்ட தசை வலியால் அவஸ்தைப்படுவோர் காஃபி அருந்தலாம்.

நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவும்:

ஹார்வர்ட் மருத்துவர் ஃப்ராங்க் ஹு ( Harvard’s Dr Frank Hu ) என்பவர் அர்ச்சீவ்ஸ் ஆஃப் இண்டர்னல் மெடிசனில் வெளியிட்டுள்ள ஆய்வில், ஒரு நாளைக்கு ஆறுக்கும் மேற்பட்ட காஃபி குடிப்பதால், இரண்டாவது வகை நீரிழிவு நோயை 22 சதவீதமாகக் குறைக்க உதவும் என்று கூறியுள்ளார். தினமும் ஒரு கப் குடிப்பதால் 9 முதல் 6 சதவீதம் குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.காஃபி வெண்டிங் மிஷினில் காஃபி அருந்துவது நல்லதா ?

மறதியைக் குறைக்கும்:

க்ரெம்பல் என்னும் மூளைக்கான கல்வி அமைப்பு காஃபி குடிப்பதால் ஞாபக மறதி நோய் ஏற்படுவதைத் தடுக்க உதவும் எனவும், இதனால் காஃபி அருந்துங்கள் எனவும் பரிந்துரைக்கிறது.மனஅழுத்தத்தை குறைக்க உதவும்:

ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வில் 4 காஃபிக்கு மேல் குடித்தால் 20 சதவீதம் மனஅழுத்தம் குறையும் என்று கண்டறிந்துள்ளது. அதேசமயம் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்களையும் குறைக்கும் என்று குறிப்பிடுகிறது.

மூளை செயலிழப்பதைத் தடுக்க உதவும்:

ஜர்னல் ஆஃப் நியூராலஜி வெளியிட்டுள்ள ஆய்வின்படி, நான்கு கப் காஃபி மூளை செயலிழத்தல் பிரச்னை மற்றும் தண்டுவடம் செயலிழத்தல், திசுக்களின் இறுக்கம் போன்ற பிரச்னைகளைக் குறைக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க : 

காஃபி வெண்டிங் மிஷினில் காஃபி அருந்துவது நல்லதா ?

ஒரு நாளைக்கு ஐந்து காஃபிக்கு மேல் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா...? அதிர்ச்சி தரும் ஆய்வு

மக்களை ஈர்க்கும் மஷ்ரூம் காஃபி... எவ்வாறு தயாரிப்பது... பலன்கள் என்ன..?
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்