உங்களுக்கு ஃபுட் ஃபோபியா இருக்கா? இதை நீங்கள் மாற்றியே ஆகனும்..!

சிலருக்கு இதை ஃபோபியாவாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. சிலருக்கு இதை ஃபோபியாவா அல்லது பருவகால தவிர்ப்பா என்பது தெரியாது.

news18
Updated: June 28, 2019, 3:18 PM IST
உங்களுக்கு ஃபுட் ஃபோபியா இருக்கா? இதை நீங்கள் மாற்றியே ஆகனும்..!
ஃபுட் ஃபோபியா
news18
Updated: June 28, 2019, 3:18 PM IST
பயமும் ஃபோபியாவும் வாழ்க்கையில் ஒரு அங்கம். ஃபோபியாக்களில் எண்ணற்ற வகைகளை கேட்டிருப்பீர்கள்.

பல வகை ஃபோபியாக்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிய வகை ஃபோபியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் நியோஃபோபியா. அதற்கு அர்த்தம் புதிய உணவுகள் மீதான ஒருவித பயம் என்பதுதான். இந்த ஃபோபியாவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புதிய உணவுகளை முயற்சி செய்வதில், அதாவது உண்டு சுவையை அனுபவிப்பதில் ஒரு வித பயம் இருக்கும். இப்படிப்படோரை பலரும் தங்கள் வாழ்க்கையில் கண்டிருக்கக் கூடும் அல்லது நீங்களே அவ்வாறு இருக்கலாம்.
சிலருக்கு இதை ஃபோபியாவாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. சிலருக்கு இதை ஃபோபியாவா அல்லது பருவகால தவிர்ப்பா என்பது தெரியாது. ஆனால், இந்த பிரச்னையால் உலகம் முழுவதும் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஒரு பக்கம் உடல் எடையைக் குறைக்க பலரும் போராடும் நிலையில் இந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஃபோபியாவால் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படுகிறது. இதனால் பல நோய்களுக்கு உள்ளாகின்றனர் என்கிறது ஹெல்சினிக் பல்கலைக்கழகம். இதற்குக் காரணம் அவர்கள் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்பதால்தான் ஏற்படுகிறது என்கின்றனர். இதனால் ஊட்டச்சத்து நிறைந்த பல உண்வுகளை தவிர்க்கின்றனர். இதனால் நீரிழிவு நோய், இதயப் பிரச்னை, வளர்ச்சிதையில் குறைபாடு, உடல் எடை போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறது American Journal of Clinical Nutrition.Loading...

இந்த ஆய்வானது 25 முதல் 74 வயதுக்கு உட்பட்டோரிடம் நடத்தப்பட்டுள்ளது. அவர்களைக் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கண்கானித்து மிகத் துல்லியமாக இந்த ஆய்வு தகவல்களை சேகரிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக அவர்களுக்கு இருக்கும் இந்த நியோ ஃபோபியாவால்தான் அவர்களுடைய வாழ்க்கை முறையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை கண்டறிந்துள்ளனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...